இனியும் சும்மா இருக்க முடியாது.. நடக்கப் போறத வேடிக்கை மட்டும் பாருங்க.. அதிமுகவை அசரடிக்கும் சசிகலா..!

Published : Jul 14, 2021, 05:49 PM ISTUpdated : Jul 18, 2021, 10:12 AM IST
இனியும் சும்மா இருக்க முடியாது.. நடக்கப் போறத வேடிக்கை மட்டும் பாருங்க.. அதிமுகவை அசரடிக்கும் சசிகலா..!

சுருக்கம்

 நிச்சயம் அரசியலுக்கு வருவேன். இனிமேலும் கட்சி வீணாவதை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன். அம்மாவோட ஆட்சி தொடர்வது தான் என்னுடைய எண்ணமாக இருந்தது. 

அம்மாவோட ஆட்சி தொடர்வது தான் என்னுடைய எண்ணமாக இருந்தது. ஆனால், அவர்கள் அதற்கு ஒத்துழைக்க வராமல் தனியாகவே நிற்கிறோம் என்று கூறி தேர்தலில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டனர் என சசிகலா கூறியுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வெளியே வந்த சசிகலா திடீரென அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். இதனையடுத்து, சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததையடுத்து தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் ஆடியோ தினசரி வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரிடம் தொலைபேசியில் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், நிச்சயம் அரசியலுக்கு வருவேன். இனிமேலும் கட்சி வீணாவதை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன். அம்மாவோட ஆட்சி தொடர்வது தான் என்னுடைய எண்ணமாக இருந்தது. ஆனால், அவர்கள் அதற்கு ஒத்துழைக்க வராமல் தனியாகவே நிற்கிறோம் என்று கூறி தேர்தலில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டனர். அதிமுக தொண்டர்களின் கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளது. அதில் நான் வந்து கட்சியை எடுத்தால் தான் நல்லது என்று கூறுகிறார்கள். ஆகவே நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சசிகலாவுடன் பேசும் அதிமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வந்தாலும் எதற்கும் அசராமல் தொண்டர்கள் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசு வருவது ஓபிஎஸ், இபிஎஸை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!