
இளையராஜா குறித்த இயக்குநர் பாரதிராஜாவின் கருத்துக்கு எதிராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா டுவீட் போட்டுள்ளார்.
இசைஞானி இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்த செய்தியை வெளியிட்ட ஆங்கில நாளிதழ் ஒன்று, இளையராஜாவை தலித் என குறிப்பிட்டு அவருக்கு பத்மவிபூஷன் விருந்து அறிவிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டது.
இசை உலகில் சாதனை படைத்த இளையராஜாவை தலித் என்று அடையாளப்படுத்தி ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இயக்குநர் பாரதிராஜா, இளையராஜா தனது அடையாளத்தை மறந்து ஐயராக(பிராமணராக) மாற நினைக்கிறார். அதனால்தான் ஆங்கில நாளிதழ் அவருடைய சாதியை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது என சாடினார்.
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா டுவீட் போட்டுள்ளார். அதில், ஐயர் என்றால் ஆசிரியர், மேன்மை கொண்டோர் என்று தான் பொருள். ஆகவே இசைஞானி இளையராஜா அவர்கள் ஏற்கனவே ஐயர் தான். அவர் புதிதாக முயற்சிப்பதாக கூறுவது புரிதல் இன்மையே என இயக்குநர் பாரதிராஜாவுக்கு பதிலளித்துள்ளார்.
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">ஐயர் என்றால் ஆசிரியர், மேன்மை கொண்டோர் என்று தான் பொருள். ஆகவே இசைஞானி இளையராஜா அவர்கள் ஏற்கனவே ஐயர் தான். அவர் புதிதாக முயற்சிப்பதாக கூறுவது புரிதல் இன்மையே.</p>— H Raja (@HRajaBJP) <a href="https://twitter.com/HRajaBJP/status/957829230926086144?ref_src=twsrc%5Etfw">January 29, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
ஏற்கனவே, ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் பேச்சு விவகாரத்தில் பாஜகவுக்கும் பாரதிராஜாவுக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது இளையராஜா விவகாரத்திலும் மோதல் ஆரம்பித்துள்ளது.