
பேருந்து கட்டண உயர்வை முற்றிலும் ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் இன்று திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களும் இதில் பங்கேற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இணங்கி வருவதாக கூறி கடந்த 20 ஆம் தேதி முதல் பேருற்து கட்டணத்தை தமிழக அரசு 100 சதவீத அளவுக்கு உயர்த்தியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் மற்றும் பயணிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். உடனடியாக பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி எதிர் கட்சிகள் சார்பில் 2 நாட்களுக்கு முன்பு போராட்டம் நடைபெற்றது, கட்டணத்தைக் குறைகும் வரையில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக நேற்று திமுக தலைமைல் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேருந்து கட்டணத்தைக் குறைக்கும் வரையில் போராட்டத்தை தொடருவது என முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து அவசர அவசரமாக கட்டணக்குறைப்பு என்ற கண்துடைப்பு நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டது. அதாவது 100 சதவீத அளவுக்கு கட்டணத்தை உயர்த்திவிட்டு தற்போது 10 சதவீதம் மட்டுமே குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் பேருந்து கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தி திமுக தலைமையில் தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னை கொளத்தூரில் பேரணியாக சென்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆயிரக்கணக்கானோருடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். இடிதயடுத்து ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
சைதாப் பேட்டையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ , விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் ஆகியோர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சியில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதே போல் தமிழகம் முழுவதும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சித் தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கனோர் கைது செய்யப்பட்டுள்ளனர்