மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் குட்கா ஊழல்... அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கடி தர திட்டம்?

By vinoth kumarFirst Published Dec 6, 2018, 10:40 AM IST
Highlights

குட்கா வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணனுக்கும் சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. 

குட்கா வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணனுக்கும் சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.  

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாதவராவுக்கு சொந்தமான குடோனில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட டைரியில் யார் யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக ஆதாரம் சிக்கியது. அதில் முக்கியமாக அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் பெயர் இடம்பெற்றிருந்தது. மேலும்  போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. 

இதனையடுத்து விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் குட்கா வியாபாரி மாதவராவ், அவரது பங்குதாரர்கள், அரசு அதிகாரிகள் என 6 பேர் கைது செய்தனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணனுக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

அதில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே  2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் இறுதி கெடுவாக நாளை ஆஜராக சரவணனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. குட்கா வழக்கை மேலும் தீவிரப்படுத்த சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!