தீயா வேலை பார்க்கும் தம்பிதுரை!! காலையில் ஊர்வலம்... மத்தியானம் அப்பல்லோவில் அட்மிட்!! இப்போ கட்சி டிஸ்கஷன்...

Published : Dec 05, 2018, 09:15 PM IST
தீயா வேலை பார்க்கும் தம்பிதுரை!! காலையில் ஊர்வலம்... மத்தியானம்  அப்பல்லோவில் அட்மிட்!! இப்போ கட்சி டிஸ்கஷன்...

சுருக்கம்

நெஞ்சுவலியால் தீவிர சிகிச்சைக்குப்பின் திரும்பிய தம்பிதுரை நாளை நடைபெற உள்ள சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் குறித்து ஆலோசணை ஈடுபட்டுள்ளார்.

நெஞ்சுவலியால் அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ள மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

நாடாளுமன்ற துணை சபாநாயகரும், கரூர் எம்.பி.யும், அ.தி.மு.க.வின் சீனியர் மோஸ்ட் தலைவருமான தம்பிதுரை நெஞ்சு வலியின் காரணமாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தம்பிதுரை. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில்,  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறும் தம்பிதுரையிடம் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார். 

இதனையடுத்து,  சிகிச்சை முடிந்து திரும்பிய தம்பிதுரை  முதல்வர் இல்லத்தில் நாளை நடைபெற உள்ள சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் குறித்து ஆலோசணை ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர், கழக துணை ஒருங்கிணைப்பாளர்  முனுசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் பங்கேற்றனர்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!