வர்ற தேர்தல்ல குரு பையனை வெச்சி பாமாகவிற்கு எதிரா பிரச்சாரம் பண்ண திட்டம் நடக்குது... மனம்விட்டு பேசிய ராமதாஸ்

Published : Dec 05, 2018, 06:48 PM IST
வர்ற தேர்தல்ல குரு பையனை வெச்சி  பாமாகவிற்கு எதிரா பிரச்சாரம் பண்ண திட்டம் நடக்குது...  மனம்விட்டு பேசிய ராமதாஸ்

சுருக்கம்

வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி குருவையே, கடைசி வரை சித்தரவதை படுத்தி கொன்றதே ராமதாஸின் குடும்பம் தான் என காடுவெட்டி குருவின் தங்கைகள் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தனர். அதுமட்டுமா குருவின் மகளை தனது சொந்தக்காரரான தன்ராஜின் மகனுக்கு கல்யாணம் செய்துவைக்க பிளான் போட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இப்படி பல்வேறு குற்றச்சாட்டுக்கு மத்தியில் தனது கட்சியின் ஐடி விங் இளைஞர்களுடன் கலந்துரையாடிய பாமக நிறுவனர் ராமதாஸ் குரு குடும்ப விவகாரத்தையும் பேசியிருக்கிறார்.அப்போது ஒரு நிர்வாகி, “குரு குடும்பத்தில் நடப்பது தொடர்பாக சமூக தளங்களில் பாமக மீது கடுமையான வெறுப்புப் பிரச்சாரம் முன் வைக்கப்படுகிறது” என்று கூறினார்.

இதைக் கேட்ட ராமதாஸ் இந்த விஷயத்தின் பின்னணி பற்றி நிர்வாகிகளிடம்  மனம் விட்டு பேசினாராம்.

“குருவை என் மூத்த பையன்னு நான் சொன்னது மட்டுமில்ல, அதுப்படிதான் நடந்துக்கிட்டும் இருக்கேன். ஆனா, குரு குடும்பத்துல சிலரை நமக்கு எதிரா திருப்பிவிட முயற்சி நடக்குது. வர்ற தேர்தல்ல குரு பையனை வெச்சி நமக்கு எதிரா பிரச்சாரம் செய்யவும் ஒரு திட்டம் நடக்குது.

இதெல்லாம் விசாரிச்சா, இதுக்குப் பின்னாடி பாஜகதான் இருக்கு. நம்மகிட்டேர்ந்து இருந்த சில முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் எல்லாம் பாஜகவுக்குப் போனாங்க. அவங்க தூண்டுதல் பேர்லதான் இது நடக்குது. பாஜகவோட நம்மைக் கூட்டணிக்குக் கூப்பிடறாங்க. அப்படிப் போனா நமக்கு விழற ஓட்டும் விழாது. அதனால நம்ம அங்கே போகப் போறதில்லை. அதுக்காகத்தான் இப்படி சில வேலைகள் செஞ்சு குருங்குற துருப்புச் சீட்டை வெச்சி பாமகவை உடைக்கலாம்னு பாஜக கணக்குப் போடுது.

எனக்குக் கிடைச்ச தகவல்படி குருவோட தங்கை குடும்பத்தினரை ஒரு மத்திய அமைச்சர் நேர்ல பார்த்து சில விஷயங்கள் பேசியிருக்காரு. அதுக்குப் பிறகுதான் நமக்கு எதிராக பிரச்சினைகளைக் கெளப்புறாங்க. இதுமட்டுமில்ல, இன்னும் என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க. ஆனால், நம்ம அசரமாட்டோம். இப்போதான் பாமகவோட பலத்தைக் காட்டணும். பாஜகவுக்குப் பயப்படக் கூடாது” என்று பேசியிருக்கிறார். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?