குட்கா விற்பனையைத் தடுப்பதில் கவனம் செலுத்தவில்லை... உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன்..!

By Thiraviaraj RMFirst Published Jul 22, 2021, 4:12 PM IST
Highlights


கடந்த 2 மாதங்களில் குட்கா விற்பனையைத் தடுப்பதில் நாம் கவனம் செலுத்தவில்லை என்பது உண்மை தான்.

கடந்த 2 மாதங்களில் குட்கா விற்பனையைத் தடுப்பதில் நாம் கவனம் செலுத்தவில்லை என்பது உண்மை தான். கொரோனா தடுப்புப் பணியில் தான் அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘’கொரோனா 2ம் அலையால் நாடு முழுவதும் ஏற்பட்ட நிலைமை குறித்து எங்களால் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்பது 100% உண்மை. மே 7 அன்று நான் பொறுப்பேற்றபோது ஆக்ஸிஜன் பற்றாக்குறை அதிகமாக இருந்தது. அப்போது தினசரி 230 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இருந்தது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,465 ஆக இருந்தது. அடுத்த நான்கு-ஐந்து நாட்களில், தொற்று அதிகரித்து, மே 21 அன்று, 36,184 என்று பதிவாகின. இதனால் எங்களுக்கு தினசரி டன் ஆக்சிஜன் தேவை 500 மெட்ரிக் ஆக உயர்ந்தது.

அந்த சூழ்நிலைகளில் கூட, முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்ற மாநிலங்களிலிருந்து ஆக்ஸிஜன்விநியோகத்தை கொண்டு வர கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார், இதன் காரணமாக எங்களால் நெருக்கடியை திறம்பட நிர்வகிக்க முடிந்தது, எனவே ஆக்சிஜன் பற்றாக்குறையால் இங்கு எந்த மரணமும் ஏற்படவில்லை.

கடந்த 2 மாதங்களில் குட்கா விற்பனையைத் தடுப்பதில் நாம் கவனம் செலுத்தவில்லை என்பது உண்மை தான். கொரோனா தடுப்புப் பணியில் தான் அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் குட்கா இல்லை என்ற நிலையை ஓரிரு மாதங்களில் உருவாக்கியே தீர வேண்டும்’’ ந்று அவர் தெரிவித்தார்.
 

click me!