ச்சே... எதுவுமே கிடைக்கலையே... முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விரக்தி..!

By Thiraviaraj RMFirst Published Jul 22, 2021, 3:50 PM IST
Highlights

இந்த சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என  லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் தெரிவித்துள்ளது.

சென்னையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 21 இடங்களில், இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியின் போது, இவர் பணியாற்றிய போக்குவரத்து துறையில் ஏராளாமான ஊழல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழும்பியது. இதையடுத்து வருமான வரித்துறையினர் சென்னை, கரூரில் உள்ள இவரது வீடுகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பரிசோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதால், அவரின் கரூர் வீட்டிற்கு முன்பு காவல் துறையினர் குவிந்துள்ளனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், தனது வருமானத்திற்கு மீறி சொத்துக்களை சேர்த்துள்ளார். இதனால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த ரெய்டுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என  லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் தெரிவித்துள்ளது.

click me!