இனி பெட்டிக்கடை முதல் சில்லறை விற்பனை கடைகள் வரை ஆப்பு.. போலீஸ் எச்சரிக்கை.. ஆட்டம் ஆரம்பம்.

By Ezhilarasan BabuFirst Published Jul 24, 2021, 1:02 PM IST
Highlights

தமிழகத்தில் போதை பொருள் தடை செய்யப்பட்ட சட்டங்கள், தண்டனை குறித்தும் வணிகர் சங்க பிரநிதிகளுக்கு விளக்கியதாக உணவு பாதுகாப்பு அதிகாரி அவர் கூறினார்.

சென்னையில் தடைசெய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையாக சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங்க் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் சுமார் 2 மணி நேரமாக காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதலமைச்சரின் உத்தரவுபடி சென்னை காவல்துறை, மாநகராட்சி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் குட்கா,மாவா போன்ற போதை பொருட்களை முழுவதுமாக தடுக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறியதாக அவர் தெரிவித்தார். போதை பொருட்களை கொண்டு வரும் போக்குவரத்து மற்றும் குடோன், கடைகளில் விற்கபடும் குட்கா, மாவாவை தடுக்க மூன்று துறைகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், அதற்கு வணிகர் சங்கர் பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பு தருவதாக அவர் கூறினார். 

அண்டை மாநிலங்களில் போதை பொருட்கள் தடையில்லை என்பதால் வேறு மாநிலங்களிலிருந்து காய்கறி வாகனம், ரயில், பேருந்துகள், சூட்கேஸ் மூலமாக போதை பொருட்களை சிலர் கடத்தி சென்னைக்குள் கொண்டு வருவதாகவும், இனி அதை தீவிரமாக கண்காணிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். போதை பொருட்கள் கடத்தல் குற்றங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் விவரங்களை சேகரித்து நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும், குடோன்களில் போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள், கடைகளில் போதை பொருட்கள் விற்பனையை முழுவதுமாக தடுக்க உள்ளதாக அவர் கூறினார்.

போதை பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மீது அதிகப்படியான அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பெரிய அளவில் போதை பொருள் கடத்தல் செய்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்திருப்பதாக அவர் கூறினார். போதை பொருட்கள் விற்பவர் குறித்தான தகவலை அளிப்பதற்காக பிரத்யேகமாக ஹெல்ப்லைன் எண்கள் வழங்க திட்டமிட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறினார். 


 

பின்னர் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் 

மாநகராட்சி சார்பாக 73,000 வர்த்தகரின் லைசன்ஸ் இருப்பதாகவும், அதில் கிட்டத்தப்பட்ட 20ஆயிரம் லைசன்ஸ் டீக்கடை,மளிகைகடை உள்ளதால் அந்த கடைகளில் போதை பொருட்கள் விற்க வாய்ப்பு உள்ளது. இந்த கூட்டத்தின் போது போதை பொருட்கள் வாங்க வேண்டாம் என சில்லறை வியாபாரிகளுக்கு மொத்த வியாபாரிகள் அறிவுரை வழங்க வேண்டும் எனவும், மீறி போதை பொருட்கள் விற்பவரின் கடைகளுக்கான லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும் என வியாபாரிகளிடம் கூறியதாக அவர் கூறினார்.

குட்கா,மாவா போதை பொருட்களை ஒழிப்பது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மா.சுப்பிரமணியன் தலைமையில் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றதாகவும், அதனை தொடர்ந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் தற்போது நடைபெற்றதாக அவர் கூறினார். தமிழகத்தில் போதை பொருள் தடை செய்யப்பட்ட சட்டங்கள், தண்டனை குறித்தும் வணிகர் சங்க பிரநிதிகளுக்கு விளக்கியதாக உணவு பாதுகாப்பு அதிகாரி அவர் கூறினார். தடைசெய்யப்பட்ட குட்கா,மாவா போதை பொருட்களை விற்றால் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு செய்து கைது செய்யலாம் என அவர் கூறினார். போதை பொருட்கள் விற்பவர் குறித்தான தகவலை 9444042322 இந்த எண் மூலமாக அனுப்பலாம் தகவல் அளிப்பவரின் விவரங்கள் பாதுகாக்கபடும் என உணவு துறை அதிகாரி தெரிவித்தார்.

 

click me!