அதெல்லாம் தடைசெய்ய முடியாது... சிபிஐ- தான் விசாரிப்பாங்க...

First Published May 18, 2018, 11:15 AM IST
Highlights
gutka and pan masala sales sbi enquiry


தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் குட்கா,பான் மசாலா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடையையும் மீறி தமிழகத்தில் இதன் விற்பனையானது நடந்து வந்தது. இதனை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது.

 ஆனால் வழக்கின் உண்மைத்தன்மை வெளி வரவேண்டும் எனக்கோரி திமுக அன்பழகன் இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மனு செய்திருந்தார். அதனை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரிக்கலாம் என உத்தரவிட்டது.

சிபிஐ விசாரிக்க தடை விதிக்க கோரி அலுவலர் சிவக்குமார் மனு செய்திருந்தார் இந்நிலையில் இந்த மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட். தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசால் விற்பனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரன் மற்றும் டி.ஜி.பி ராஜேந்திரன் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது.

சிபிஐ விசாரிக்க தடையில்லை எனக்கூறியுள்ள நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரன் அரசுமுறை பயணமாக ஜப்பானும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அரசுமுறை பயணமாக ஊட்டியும் சென்றுள்ளார்.

 

click me!