பாஜகவிற்கு பயந்து ஊர் ஊராக சுற்றிய எம்.எல்.ஏக்கள்! “தீயா வேலை செய்யும் குமாரு”!   

First Published May 18, 2018, 10:57 AM IST
Highlights
Congress-JDS Lawmakers Reach Hyderabad By Bus


ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள குதிரை பேரத்தை தொடங்கியதால்  காங்கிரஸ் மஜத தங்களது  எம்.எல்.ஏக்களை பாதுகாக்க பஜகவிற்க்கு பயந்த  ஊர் ஊராக சுற்றியது தெரிய வந்துள்ளது.

பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், பாஜகவிற்கே ஆளுநர் அழைப்பு விடுத்த இந்த நிலையில், கர்நாடகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலிலும் பல்வேறு களேபரங்களுக்கும் மத்தியில் முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா. ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்த நிலையில் அவரோ பெருந்தன்மையாக 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் பதவி ஏற்பிற்கு தடை விதிக்க மறுத்ததால்எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுள்ளார். 

இந்நிலையில்,  தற்போது கர்நாடகாவில் குதிரை பேரம் நடக்கும் நிலை உருவாகி உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியும், மஜத கட்சியும் எப்படியாவது தங்கள் எம்எல்ஏக்களை பாதுகாத்துக் கொள்ள முடிவெடுத்து கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எல்லோரும் சரியாக 9 மணிக்கு ஹைதராபாத் கிளம்பினர். தெலுங்கானாவில் உள்ள பார்க் ஹயாட் சொகுசு விடுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எல்லோரும் காரில் வந்ததாக கூறப்படுகிறது. சுமார் 30க்கும் அதிகமான காரில் அவர்கள் வந்துள்ளனர். மஜத எம்எல்ஏக்கள் பேருந்தில் வந்து கொண்டு இருக்கிறார்கள். 

பேருந்தில் சற்று முன்பு மஜத எம்எல்ஏக்கள் அதே பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ஒரு இரவு முழுக்க பாஜகவிற்கு பயந்து இவர்கள் ஊர் ஊராக சுற்றியுள்ளனர். இவர்கள் மொத்தம் சர்மா டிராவல்ஸ், ஆரஞ்ச் டிராவல்ஸ், எஸ்ஆர்எஸ் டிராவல்ஸ் ஆகிய 3 பேருந்துகளில் வந்து இருக்கிறார்கள். இவர்கள் பேருந்திற்கு முன்னும் பின்னும் மொத்தம் 7 கார் பாதுகாப்பிற்கு சென்றுள்ளது. பாஜகவினர் பிரச்சனை செய்ய கூடாது என்பதால் இப்படி செய்துள்ளனர். 



ஏற்கனவே கர்நாடக மாநில அரசு இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று கூறியது. பெங்களூரில் அவர்கள் தங்கி இருந்த ஈகிள்டன் ஹோட்டலில் பாதுகாப்பை திரும்ப பெற்றதால் செய்வதறியாமல் திணறிய குமாரசாமி உடனே தெலுங்கானா முதல்வரை தொடர்புகொண்டு எம்.எல்.ஏக்களை பாதுகாக்க உதவி கேட்டதால், சந்திரசேகர ராவ் உடனே பாதுகாப்பு வழங்க அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய தொடங்கினார். இவர்களுக்கு பாதுகாப்பளிக்க சுமார் 1000க்கும் அதிகமான மாநில போலீஸ் ஏற்பாடு செய்யப்பட்டு ஹோட்டலுக்கு வெளியேயும் உள்ளேயும் நிறுத்த உத்தரவிட்டாராம். 



இந்தனைத் தொடர்ந்து நேற்று இரவு முழுக்க இவர்கள் பயணித்த போது, 7 காரிலும் துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாப்பு வீரர்கள் சென்றுள்ளனர். அதேபோல் பவுன்சர்ஸ் எனப்படும் குண்டு கட்டாக தூக்கி எறியும் பாதுகாப்பு நபர்களும் நூற்றுக்கணக்கில் பாதுகாப்பிற்கு அமைக்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏக்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் மொத்த வேலையையும் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவக்குமார் பார்த்து வருகிறார்

click me!