குஜராத்தில் தொடரும்  தீண்டாமைக் கொடுமை…. குதிரையில் வந்த தலித் மணமகனை என்ன செய்தார்கள் தெரியுமா சாதி வெறியர்கள் ?

 
Published : Jun 20, 2018, 07:28 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
குஜராத்தில் தொடரும்  தீண்டாமைக் கொடுமை…. குதிரையில் வந்த தலித் மணமகனை என்ன செய்தார்கள் தெரியுமா சாதி வெறியர்கள் ?

சுருக்கம்

Gujarath some people attack bride who travel in horse and torcher him

குஜராத்தில் திருமணத்தன்று மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின்போது, குதிரையில் பவனி வந்த தலித் மணமகனை, சாதி வெறியர்கள் கீழே இறக்கி விட்டு அவமானப்படுத்திய சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள பர்சா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் சோலங்கி இவர் அங்குள்ள பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வர்ஷா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

சுமார் 2 லட்சம் ரூபாய் செலவில் இவர்களின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், திருமணத்தன்று மாப்பிள்ளை அழைப்பாக பிரசாந்த் தனது வீட்டிலிருந்து மணப்பெண் வீட்டுக்கு காரில் சென்றார்.

பின்னர், அங்கிருந்து திருமணம் நடக்கும் இடத்துக்கு செல்ல அவர்களது உறவினர்கள் அலங் கரிக்கப்பட்ட குதிரை ஒன்றை ஏற்பாடு செய்து, மணமகன் பிரசாந்தை அதில் ஏற்றியுள்ளனர். அவரும் மகிழ்ச்சியுடன் குதிரையில் பவனி வந்துள்ளார்.

அப்போது வழியில், சாதி ஆதிக்கப் பிரிவைச் சேர்ந்த ஒரு கும்பல், தலித் பிரிவைச் சேர்ந்த பிரசாந்த் எப்படி குதிரையில் வரலாம் என்று கேட்டுத் தகராறு செய்து, பிரசாந்த்தை குதிரையில் இருந்து இறக்கி விட்டு அவமானப்படுத்தியுள்ளனர்.

மணமேடைக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்த பிரசாந்த், சாதி வெறியர்களின் இந்த அராஜகத்தால் மிகவும் மனமுடைந்து போனார். பின்னர் ஒருவழியாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், தலித் மணமகனை குதிரை யிலிருந்து இறக்கி விட்டசம்பவத்திற்கு கடும்கண்டனங்கள் எழுந்துள்ளன. இதே குஜராத்தில், சில மாதங்களுக்கு முன்பும் இதேபோல, குதிரையில் சென்றதற்காக பிரதீப் ரத்தோட் என்ற தலித் சிறுவனை சாதிவெறியர்கள் படுகொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

செங்கோட்டையனுக்கு சின்ன சங்கடமோ, மரியாதை குறைவோ வந்துடக்கூடாது..! புஸ்சியிடம் விஜய் போட்ட உத்தரவு
மோடிக்காக காரை ஓட்டிய முஹமது நபியின் 42 வது நேரடி தலைமுறை ஜோர்டான் இளவரசர்..!