குஜராத்தில் திரும்பவும் பாஜகதான் ஆட்சிக்கு வரும் !! மற்றுமொரு கருத்துக் கணிப்பு அப்படித்தான் சொல்லுது !!!

 
Published : Dec 06, 2017, 10:51 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
குஜராத்தில் திரும்பவும் பாஜகதான் ஆட்சிக்கு வரும் !! மற்றுமொரு கருத்துக் கணிப்பு அப்படித்தான் சொல்லுது !!!

சுருக்கம்

gujarath bjp again win in assembly election

குஜராத் மாநிலத்தில்  நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக  வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தற்போது வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், லோக்நிதி-சிஎஸ்டிஎஸ்-ஏபிபி நியூஸ் ஆகியவை இணைந்து சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தின.

அதில் குஜராத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா 43 சதவீத வாக்குக் கிடைக்கும் என்றாலும்  மொத்தம் உள்ள 182-ல் பாஜகவுக்கு 91 முதல் 99 தொகுதிகளும் காங்கிரஸுக்கு 78 முதல் 86 இடங்களும் கிடைக்கும். சென்ற தேர்தலைவிட குறைவான இடங்களையே பாஜக பெற்றாலும் அக்கட்சியே அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது.

பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது இந்த கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் ஜிஎஸ்டி வரி விகிதம் பெரிய அளவில் குறைக்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் திருப்தி அடையவில்லை என்பதை உணர முடிவதாக அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மாநில அரசு மீதான விவசாயிகளின் அதிருப்தியும் காங்கிரஸ் கட்சியின் எழுச்சிக்கு காரணமாக விளங்குகிறது.

வடக்கு மற்றும் தெற்கு குஜராத்தில் காங்கிரஸுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது என்றும்,  அதேநேரம் சவுராஷ்டிரா மற்றும் மத்திய குஜராத்தில் பாஜக தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதுபோல, நகர்ப்புறங்களில் பாஜகவுக்கும் கிராமப்புறங்களில் காங்கிரஸுக்கும் செல்வாக்கு அதிக அளவில் காணப்படுகிறது என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதே அமைப்புகள் கடந்த ஆகஸ்ட் மாதம் கருத்து கணிப்பு நடத்தியபோது  பாஜக 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸுக்கு வெறும் 30 தொகுதிகளே கிடைக்கும் என்றும் தெரியவந்தது.

அக்டோபரில் நடத்திய கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 113 முதல் 121 தொகுதிகளும் காங்கிரஸுக்கு 58 முதல் 64 தொகுதிகளும் கிடைக்கும் என தெரியவந்தது.

தற்போது பாஜகவுக்கு 91 முதல் 99 இடங்கள்  மட்டுமே கிடைக்குன் என தெரியவ்ந்துள்ளது. தேர்தலுக்கு இன்றும் 1 வாரமே உள்ள நிலையில், அடுத்தடுத்து என்ன மாற்றங்கள் நிகழும் என்பது போகப் போக தெரியவரும்.

 

 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!