
தமிழக அரசியலில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்றும், நடிகர் விஷாலின் வேட்புமனு நிரகரிக்கப்பட்டுள்ளது, இந்திய தேர்தல ஆணையம் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதை தெளிவாக காட்டுவதாக இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணமடைந்தததையடுத்து சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், டி.டி.வி.தினகரன், பாஜக சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம் உள்ளிட்டோர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விஷால் திடீரென ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக தெரிவித்தார். இதற்கு திரையுலகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் ஒருசிலர் விஷாலுக்கு கடும் எதிர்ப்புத் தொவித்தனர். இயக்குநர் அமீர் , தயாரிப்பாளர் சங்க வேலைகளை மட்டும் விஷால் பார்க்கட்டும்…அதிலே நிறைய தீர்க்கப்படாத பிரச்சனைகள் உள்ளன என தெரிவித்திருந்தார்.
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நிற்கட்டும் என கூறி இயக்குநர் சேரன் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார் . அவருக்கு ராதிகா, ராதாரவி , டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் நேரில் சென்னு சேரனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக விஷால் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அவருக்காக வேட்பு மனுவில் கையெழுத்திட்டதாக கூறப்படும் 2 பேர், தாங்கள் கையெழுத்திடவில்லை என தேர்தல் ஆணையரிடம் நேரடியாக புகார் தெரிவித்ததால் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரப்பூர்வமான அறிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் அமீர், தமிழகத்தில் ஜனநாயப் படுகொலை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார். நடிகர் விஷாலின் வேட்புமனு நிரகரிக்கப்பட்டுள்ளது, இந்திய தேர்தல ஆணையம் இன்னும் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதை தெளிவாக காட்டுவதாகவும் இயக்குநர் அமீர் காட்டமாக தெரிவித்தார்.