தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி பெறுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறை. சுகாதாரத்துறை அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jul 2, 2021, 12:19 PM IST
Highlights

மருத்துவமனைகளுக்கு கொரனோ தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 25 சதவீத கொரனோ தடுப்பூசிகளை வழங்குவதில் தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளுக்கு கொரனோ தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 25 சதவீத கொரனோ தடுப்பூசிகளை வழங்குவதில் தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கூடுதல் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்ய சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகள் கோவிட் செயலியில் பதிவு செய்திருக்கவேண்டும். 

பெரும்பாலான மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன,இந் நிலையில் மீதம் உள்ள தனியார் மருத்துவமனைகளும் பதிவு செய்ய சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. மேலும் அந்த காலங்களில் வழக்கமாக தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை பொறுத்து மட்டுமே வரும் காலங்களிலும் தடுப்பூசிகள் வழங்கப்படும். தடுப்பூசிகளின் தேவை குறித்து சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகள் பதிவேற்றம் செய்யும் பட்சத்தில் கோரிக்கையை அளித்த 3 நாட்களுக்குள் தடுப்பூசிக்கான தொகையை தனியார் மருத்துவமனைகள் செலுத்த வேண்டும். 

புதிய மருத்துவமனைகளுக்கு படுக்கைகள் மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் தினசரி தடுப்பூசி பயன்பாடு தொடர்பான தகவலை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம் தடுப்பூசி வீணாவதை கண்டறிய முடியும். இது தொடர்பான கூடுதல் வழிகாட்டுதல்களை பெற தனியார் மருத்துவமனைகள் 0120 - 4473222 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வழிகாட்டுதல்களை பெறலாம் எனவும் தமிழக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

click me!