நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோயில் பூஜை... நாசுக்காக தவிர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RM  |  First Published Jul 2, 2021, 11:39 AM IST

நடிகர் அர்ஜூன் கடந்த 28ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது ஆஞ்சநேயர் கோயில் விஷேச பூஜையில் கலந்து கொள்ள மு.க.ஸ்டாலினை அழைத்ததாக கூறப்படுகிறது.


நடிகர் அர்ஜூன் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றவர். மிகுந்த ஆஞ்சநேயர் பக்தரான இவர், தனது படங்களிலும் ஆஞ்சநேயர் பக்தராக நடித்துள்ளார்.

Latest Videos

undefined

இந்நிலையில் நடிகர் அர்ஜுன் சென்னை, போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டி இருக்கிறார். அவருக்கு சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவு உள்ள தோட்டத்தில் ஒரு ஏக்கரில் இந்த கோவிலை கட்டியுள்ளார். கர்நாடக மாநிலம், கொய்ரா என்ற கிராமத்தில் 200 டன் எடை கொண்ட ஒரே கல்லில் 28 அடி உயரம் 17 அடி அகலத்தில் ஆஞ்சநேயர் உட்கார்ந்து இருப்பது போன்று சிலையை வடித்து, 22 சக்கரங்கள் கொண்ட ராட்சத டிரக்கில் ஏற்றி கெருகம்பாக்கத்துக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் சில விஷேச பூஜைகள் மற்றும் கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக குறிப்பிட்ட சிலரை மட்டுமே அழைத்த அர்ஜுன், தனது யூடியூப் சேனல் மூலம் நேரடி ஒளிப்பரப்பை செய்தார். பின்னர் அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. முன்னதாக, நடிகர் அர்ஜூன் கடந்த 28ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது ஆஞ்சநேயர் கோயில் விஷேச பூஜையில் கலந்து கொள்ள மு.க.ஸ்டாலினை அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், இன்று நடைபெற்ற பூஜையில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

click me!