இந்த 8 மாவட்டங்களில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!

By vinoth kumarFirst Published Jul 2, 2021, 11:04 AM IST
Highlights

கொரோனா அதிகரித்தது பற்றி கடலூருக்கு நாளை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளேன் என தெரிவித்துள்ளார். தொற்று குறைந்து வந்தாலும் பரிசோதனை எண்ணிக்கையை அரசு குறைக்கவில்லை. இனி மாவட்ட வாரியாக எடுக்கப்படும் கொரோனா மாதிரி பரிசோதனை விவரமும் செய்திக்குறிப்பில் தெரியப்படுத்தப்படும். 

தொற்று குறைந்து வந்தாலும் பரிசோதனை எண்ணிக்கையை அரசு குறைக்கவில்லை என  சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

பொது சுகாதாரத் துறை மற்றும் யுனிசெப் இணைந்து நடத்தும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை  சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருவான்மியூரில் இன்று  கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- கொரோனா பேரிடரால் ஏற்படும் பாதிப்பு, அதில் இருந்து மீண்டு வருவதற்கான வழிமுறைகள் குறித்தும் இதில் அறிவுறுத்தப்படும். தடுப்பூசி தான் கொரோனா தொற்றுக்கு ஒரே தீர்வு என்ற அடிப்படையில் அதுகுறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்கொள்கிறோம் என்று கூறினார். 

மேலும், தஞ்சை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்பட 8 மாவட்டங்களில் கொரோனா சிறிய அளவில் அதிகரித்துள்ளது. கொரோனா அதிகரிக்க தொடங்கிய மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொரோனா அதிகரித்தது பற்றி கடலூருக்கு நாளை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளேன் என தெரிவித்துள்ளார். தொற்று குறைந்து வந்தாலும் பரிசோதனை எண்ணிக்கையை அரசு குறைக்கவில்லை. இனி மாவட்ட வாரியாக எடுக்கப்படும் கொரோனா மாதிரி பரிசோதனை விவரமும் செய்திக்குறிப்பில் தெரியப்படுத்தப்படும். 

அதிமுக ஆட்சியில் நாள் ஒன்றுக்கு சரியாக 61 ஆயிரம் பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டது. திமுக ஆட்சியில்  நாள் ஒன்றுக்கு  1.34 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகிறது. அதிமுக தடுப்பூசி குறித்து விமர்சிப்பது ஆச்சரியமாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. செங்கல்பட்டில் எச்எல்எல் நிறுவனம் எங்குள்ளது என ஓபிஎஸுக்கு தெரியுமா எனக் கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தில் கையிருப்பில் உள்ள 8,16,890 தடுப்பூசிகளை 2 அல்லது 3 நாட்கள் போடலாம் என அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

click me!