அடுத்த மூன்று நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம்..?? புது முகங்களுக்கு வாய்ப்பு என தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Jul 2, 2021, 12:08 PM IST
Highlights

அடுத்த மூன்று நாட்களில் மோடி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது உள்ள பல அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், மேலும் 5 மாநில தேர்தலை கருத்தில் கொண்டு பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

அடுத்த மூன்று நாட்களில் மோடி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது உள்ள பல அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், மேலும் 5 மாநில தேர்தலை கருத்தில் கொண்டு பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி வெற்றிகரமான இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் மோடி அமைச்சரவையில் சுமார் 53 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். தற்போது இந்த அமைச்சரவையில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கூடுதலாக 28 அமைச்சர்களை நியமித்து மொத்தம் 81 அமைச்சர்களை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதில் தற்போதைய அமைச்சரவையில் உள்ள பலரின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்றும் 5 மாநிலங்களில் தேர்தலில் கருத்தில் கொண்டு பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள அமைச்சர்களில்  9 க்கும் அதிகமான அமைச்சர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சின் பொறுப்புக்களை வைத்துள்ளனர். குறிப்பாக பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், நிதின்கட்கரி, ஹர்ஸ் வர்தன்,  நரேந்திர சிங் தோமர், ரவிசங்கர் பிரசாத், ஸ்மிருதி ராணி மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோரின் அதில் அடங்குவர்.

உத்திர பிரதேசத்தில் இருந்து 5 அமைச்சர்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது, அதில் வருண் காந்தி , ராம் சங்கர் கதேரியா, ரீட்டா பகுகுணா ஜோஷி, அணில் ஜெயின் மற்றும் ஜாபர் இஸ்லாம் ஆகியோரின் பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளன. உ.பியில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மறுசீரமைப்பில் உ.பிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மோடி அரசாங்கத்தில் மறுசீரமைப்புக்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஜய் பட் அல்லது அணில் பாலூனி ஆகியோர் பொறுப்பேற்க கூடிய அல்லது  அமைச்சர்களாக சாத்தியக்கூறுகள் இருப்பதாக கருதப்படுகிறது. அதேபோல், கர்நாடகாவைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹா,

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜெகநாத் சர்க்கார், சாந்தனு தாக்கூர் அல்லது நஷீத் பிரமானிக் , ஹரியானாவை சேர்ந்த பிரி ஜேந்திர சிங் , ராஜஸ்தானைச் சேர்ந்த ராகுல் கஸ்வான், ஒடிசாவைச் சேர்ந்த அஸ்வினி வைஷ்ணவ், பூனம் மகாஜன் அல்லது பிரீதம் முண்டே அல்லது மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹீனா கவிட். டெல்லியைச் சேர்ந்த பர்வேஷ் வர்மா அல்லது மீனாட்சி லேகி ஆகியோரும் அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல சில கூட்டணி கட்சியை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
 

click me!