மோசடி வழக்கு... நெஞ்சு வலிப்பதாக கூறி போலீஸ் பிடியில் இருந்து எஸ்கேப்பான திமுக பிரமுகர்..!

By vinoth kumarFirst Published Aug 19, 2021, 5:47 PM IST
Highlights

நெல்லை மாவட்டம் கேடிசி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் எஸ்.பி.ராஜா. இவர் பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சிமெண்ட் இறங்குமதி செய்து விற்பனை செய்து வந்துள்ளார். 

போலி பில்கள் தயாரித்து கொடுத்து 6.50 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த நெல்லையை சேர்ந்த திமுக பிரமுகர் கைது செய்யப்பபட்ட நிலையில் போலீசார் பிடியில் இருநது தப்பியோடியுள்ளார். 

நெல்லை மாவட்டம் கேடிசி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் எஸ்.பி.ராஜா. இவர் பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சிமெண்ட் இறங்குமதி செய்து விற்பனை செய்து வந்துள்ளார். அமமுகவில் பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளராக பதவி வகித்த இவர் கடந்த மாதம் திமுகவில் இணைந்தார். எஸ்.பி.ராஜா ஜிஎஸ்டியில் உள்ளிட்டு வரி தொடர்பாக பலருக்கு போலி பில்கள் தயாரித்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

அதில், அரசு பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பும், மோசடி நடந்ததாக தெரிகிறது. இந்நிலையில், வணிகவரித்துறை, ஜிஎஸ்டி பிரிவு அதிகாரிகள் இதுதொடர்பான விசாரணையில் இறங்கினர். அதில், எஸ்.பி.ராஜா 6,5 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. நெல்லை மாவட்ட புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ராஜா மீது அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த ராஜா போலீசார் அழைத்து சென்றனர். முன்னதாக மருத்துவ பரிசோதனை செய்ய நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எஸ்.பி.ராஜா அழைத்து செல்லப்பட்டார். 

அப்போது, தனக்கு நெஞ்சுவலிப்பதாக அதிகாரிகளிடம் கூறியதாக தெரிகிறது. ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் மருத்துவரிடம் எஸ்.பி.ராஜா தெரிவித்த நிலையில் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். காவல்துறை பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.ராஜா செவ்வாக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் இருந்து தப்பியோடினார். இதுகுறித்து வணிகவரித்தறை அதிகாரிகள் நெல்லை ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய எஸ்.பி.ராஜாவை போலீசார் தீவிர தேடிவருகின்றனர். 

click me!