உலக அளவில் ரீச் ஆன தினகரன்! பெருகும் ஆதரவுக்கு பின்னணி என்ன?

Asianet News Tamil  
Published : Dec 19, 2017, 05:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
உலக அளவில் ரீச் ஆன தினகரன்! பெருகும் ஆதரவுக்கு பின்னணி என்ன?

சுருக்கம்

Growing support for Dinakaran What is the background

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் பல்வேறு சச்சரவுக்குப் பிறகு வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்வானோர் பட்டியலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.

அதிமுகவின் மற்றொரு பிரிவாகவே தினகரன் செயல்பட்டு வருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

ஆர்.கே.நகரில், தினகரன் வெற்றி பெறுவார் என்று பல்வேறு கருத்து கணிப்புகள் கூறி வருகின்றன. அது மட்டுமல்லாது ஆர்.கே.நகர் தொகுதிக்கு தினகரன் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

இந்த நிலையில், தினகரனுக்கு ஆதரவாக நெடடிசன்களும் களமிறங்கி உள்ளனர். அதற்கான காரணங்களையும் அவர்கள் முன் வைக்கின்றனர். அதாவது, ஆர்.கே.நகரில் மருதுகணேஷ் வெற்றி பெற்றால் திமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 89-ல் இருந்து 90 ஆக உயரும். இந்த உயர்வால், தற்போதைய ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அரசு கவிழப்போவதில்லை. அது மட்டுமல்லாது இந்த அரசு தொடரவே செய்யும் என்றும் நெட்டிசன்கள் கருத்து கூறி
வருகின்றனர்.

ஆனால், டிடிவி தினகரன் வெற்றி பெற்றால், பன்னீர் - எடப்பாடி அதிமுக கட்சி உடைய வாய்ப்புள்ளது என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதன் விளைவாக சில எம்எல்ஏக்கள், அணி மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் மூலம், சட்டமன்றத்தில் போட்டி அதிமுக உருவாகவும், அதன் தொடர்ச்சியாக நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி - பன்னீர் அதிமுக அரசு கவிழ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. டிடிவி தினகரன் வெற்றி பெறுவதே சாலச்சிறந்தது என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், உலக தமிழர்களோ, திமுகவின் மருதுகணேஷ் அல்லது டிடிவி தினகரன் இவர்களில் எவரேனும் ஒருவர் ஜெயிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.  

தேர்தல் முடிவில் நெட்டிசன்களின் மனநிலை பிரதிபலிக்குமா? அல்லது உலக தமிழர்களின் மனநிலை பிரதிபலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

PREV
click me!

Recommended Stories

ஓபன் சேலஞ்ஜ்-க்கு தயார்..! என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்..!
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!