உருப்படியான தேர்தல் அறிக்கை...! நிலத்தடி நீர், ஆற்று மணல் பாதுகாப்பு, மது விலக்கு... அசத்தும் பாஜக..!

By vinoth kumarFirst Published Mar 23, 2021, 10:30 AM IST
Highlights

கோயில்களை நிர்வகிக்க தனி வாரியம், பூரண மதுவிலக்கு, சென்னை 3 மாநகராட்சியாக பிரிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயில்களை நிர்வகிக்க தனி வாரியம், பூரண மதுவிலக்கு, சென்னை 3 மாநகராட்சியாக பிரிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கான தொலைநோக்கு பத்திரம் என்ற தலைப்பிலான தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.

பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:-

*  விவசாயிகளுக்கு வழங்கப்படுவதுபோல மீனவர்களுக்கும் வருடாந்தர உதவித்தொகை ரூ.6,000 வழங்கப்படும்.

*  தொழில் செய்ய ஏதுவான சூழ்நிலையை உருவாக்கி தென்னிந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்குவோம்.

*  தமிழகத்திலுள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டுப் பட்டியலின மக்களிடமே வழங்கப்படும்.

*  மதச்சார்பற்ற அரசு, இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை மட்டும் தன் வசம் வைத்திருப்பதை மாற்றி இந்துக் கோயில்களின் நிர்வாகம் இந்து ஆன்றோர் சான்றோர் மற்றும் துறவிகள் அடங்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.

*  பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும்.

* 18 முதல் 23 வயதுவரையுள்ள இளம் பெண்களுக்கு இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இலவசமாக வழங்கப்படும்.

* அதிகமான நிதி ஒதுக்கீட்டுடன் விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் போடப்படும்.

*  மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்குக் குடியுரிமை பொருள்கள் இல்லம் தேடி நேரடியாக வழங்கப்படும்.

*  தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான அரசு பல்நோக்கு மருத்துவமனைகள் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் நிறுவப்பட்டு     அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.

* சென்னை மாநகராட்சி மூன்று மாநகராட்சிகளாகப் பிரிக்கப்படும்

*  சட்டங்களை விவாதிக்கும் விஷயத்தில் அறிவார்ந்த பல்வேறு துறைகளின் நிபுணர்கள் அடங்கிய சட்ட மேலவை இருப்பது பயனுள்ளதாக           இருப்பதால், சட்ட மேலவை மீண்டும் கொண்டு வரப்படும்.

* சென்னை உயர்நீதிமன்ற கிளை கோயம்புத்தூரில் உருவாக்கப்படும்.

* தனியார்மருத்துவமனைகளுக்கு நிகரானஅரசு பல்நோக்கு மருத்துவமனைகள் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் நிறுவப்பட்டு அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும்

*  அனைத்து கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் ஜல் ஜீவன் திட்டம் மூலம் 2022-க்குள் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மூலம் இலவசமாக வழங்கப்படும்.

* நிலத்தடி நீர்மட்டம் உயரவும், ஆறுகளில் நீரோட்டம் சீராக இருக்கவும் முற்றிலுமாக 5 ஆண்டுகளுக்கு ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளுவது  தடை செய்யப்படும்.

*  8,9-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக டேப்லேட் வழங்கப்படும்.

*  நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

click me!