மக்கள் போரட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி…! ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்க அரசு உத்தரவு

First Published May 28, 2018, 5:42 PM IST
Highlights
govt order shut down sterlite


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் 100 நாட்களாக அமைதியான முறையில் போராடி வந்தனர். 100வது நாளில் போடப்பட்ட 144 தடை உத்தரவை மீறி மக்கள் போராட்ட்த்தில் ஈடுபட்ட்தால் அவர்களை கட்டுப்படுத்த அரசு அவ்ர்கள் மீது துப்பாக்கி சூட்டினை நட்த்தியது இதில் 13 பேர் உயிரிழந்தனர் 19பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில் இன்று தூத்துகுடியில் இயல்பு நிலை திரும்பியதை ஒட்டி துணை முதல்வர் பன்னீர் செல்வமும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் காயமுற்றவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினர்.

பின் மதியம் சென்னை அமைச்சர்கள் முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையின் முடிவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டெர்லைட்  ஆலையை மூட அரசாணையை வெளியிட்டுள்ளார். ஆலைக்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்திரவிட்டதையொட்டி ஸ்டெர்லைட் நிறுவனம் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்காடி மீண்டும் காப்பர் தயாரிக்க அனுமதி பெற்றது. இதனையொட்டி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் இந்த அரசாணை முக்கியத்துவம் வாய்ந்த்தாக கருதப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு பிறகு மீண்டுமொரு மக்கள் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. இந்த வெற்றி 13 பேர்களின் உயிரை பழிவாங்கியே கிடைத்துள்ளது என்பதை இனி வரும் ஆட்சியாளர்களும் மக்களும் மறக்காமல் இருக்கவேண்டும்.  

click me!