"ஆளுநர் நீட் தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்ப மாட்டாருங்க" .. அடித்து சொல்லும் சீமான்.

Published : Mar 14, 2022, 01:16 PM IST
"ஆளுநர் நீட் தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்ப மாட்டாருங்க" .. அடித்து சொல்லும் சீமான்.

சுருக்கம்

அப்படிக் கூறும் இவர்கள் ஏன் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலை 13 கட்டமாக தேர்தல் நடத்தினார்கள். எப்படியாவது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு நடத்தப்பட்டது.

தமிழக அரசு நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப மாட்டார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மத்திய அரசு தான் செய்ய நினைக்கும் திட்டங்களை நீதிபதிகள் மூலமாக நிறைவேற்றி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் அரசு அறிவித்து வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை என்ற விமர்சனமும் திமுக அரசுக்கு எதிராக இருந்து வருகிறது. அதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் மற்றும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் அடங்கும்.

நீட் விலக்கு வாக்குறுதி... 

தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம், அதற்கான வழிமுறைகள் திமுகவிடம் உள்ளது, அது திமுகவுக்கு மட்டும் தெரிந்த ரகசியம் என முதல்வர் ஸ்டாலின்  கூறிவந்தார். திமுக ஆட்சியை பிடித்த பத்து மாதங்கள் ஆகிவிட்டது, ஆனாலும் இது வரையில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியவில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்த சில வாரங்களில் நீட்டில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசு அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் ஆளுநர் அதன் மீது பாராமுகமாக இருந்து வந்தார். அதைத்தொடர்ந்து தமிழக அரசு கொடுத்து வந்த நெருக்கடியின் காரணமாக ஆளுநர் அந்த மசோதாவை மாநில அரசுக்கே திருப்பி அனுப்பிவிட்டார் இது அப்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இரண்டாவது முறையாக தீர்மானம்... 

இந்நிலையில் இரண்டாவது முறையாக சட்டமன்றத்தைக் கூட்டி மீண்டும் அதே ஆளுநருக்கு தீர்மானம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த முறை ஆளுநர் தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியே தீர வேண்டும், அதுதான் அரசியல் அமைப்பு சட்டம் என திமுகவினர் கூறிவருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசு அனுப்பி வைத்துள்ள நீட் விலக்கு தீர்மானத்தை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப மாட்டார் என உறுதிபடக் கூறியுள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தினால் செலவுகள் குறையும் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். 

ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்ப மாட்டார்... 

அப்படிக் கூறும் இவர்கள் ஏன் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலை 13 கட்டமாக தேர்தல் நடத்தினார்கள். எப்படியாவது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கூறுபவர்கள் ஒரே குளத்தில் குளிக்கலாம், ஒரே சுடுகாட்டில் அனைவரையும் புதைக்கலாம் என்று ஏன் சொல்ல தயங்குகிறார்கள். இந்தியா எந்த காலத்திலும் ஒரே நாடு கிடையாது union of state தான் இதுதான் அரசியல் என்று சொல்கிறது.  நீட் தேர்வை பொருத்தவரையில் காங்கிரஸ்தான் கொண்டு வந்தது, அதை செயல்படுத்தியது தான் பாஜக. நீட் தேர்வு எப்படி தரமான மருத்துவர்களை உருவாக்கும்? அப்படி என்றால் நீட் தேர்வுக்கு முன்னர் மருத்துவர்களானவர்கள் எல்லாம் தரமில்லாத மருத்துவர்களா? என கேள்வி எழுப்பிய சீமான் நீட் தேர்வு எழுதினால் தான் மருத்துவ இடம் என்றால், 12-ஆம் வகுப்பு தேர்வுகள் எதற்கு.

நேரடியாக நீட்தேர்வையே எழுதலாமே என விமர்சித்துள்ளார். நீட் விலக்கு வேண்டி தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்ப மாட்டார் என திட்டவட்டமாக தெரிவித்த அவர், மத்திய அரசு அமல்படுத்த நினைக்கும் அனைத்தையும் நீதிமன்றம் எடுத்துச் சென்று நீதிபதிகள் உத்தரவு மூலம் செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.  

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!