ஆந்திர மாநிலம் சித்தூரில் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றியவர் ராஜலட்சுமி (41) கடந்த 2 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து தனது 10 வயது மகன் ஷியாம் கிஷோருடன் திருப்பதியில் வசித்து வருகிறார்.
தாய் இறந்ததுகூட அறியாமல் நான்கு நாட்கள் 10 வயது சிறுவன் சடலத்துடன் தங்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தாய் ஓய்வு எடுப்பதாக அச்சிறுவன் எண்ணியதால் 4 நாட்களும் சடலத்துடன் படுத்து உறங்கியது துயரம் நடந்துள்ளது. பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தில் நம்ப முடியாத பல சம்பவங்கள் ஏதோ ஒரு மூளையில் நடந்தவண்ணம் உள்ளது. அந்த வகையில் தனது தாய் இறந்தது கூட அறியாமல் ஒரு சிறுவன் நான்கு நாட்கள் தாயின் சடலத்துடன் வசித்து வந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. தாயின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தனது மாமாவுக்கு சிறுவன் தொலைபேசியில் கூறியதை அடுத்தே இச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கல்லூரி விரிவுரையாளர்...
ஆந்திர மாநிலம் சித்தூரில் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றியவர் ராஜலட்சுமி (41) கடந்த 2 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து தனது 10 வயது மகன் ஷியாம் கிஷோருடன் திருப்பதியில் வசித்து வருகிறார். திருப்பதியில் உள்ள வித்யா நகர் காலனியில் வீடு வாடகை எடுத்து தாயும் மகனும் ஆதரவின்றி வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக ராஜலட்சுமி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில்தான் கடந்த 8ஆம் தேதி இரவு வீட்டில் அவர் சாப்பிட்டு விட்டு அறையில் தூங்கினார். அப்போது படுக்கையிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிகிறது. ஆனால் அவரது மகன் ஷியாம் கிஷோர் தன்னுடைய அம்மா ஓய்வு எடுப்பதாக நினைத்துக்கொண்டு அவரின் சடலத்தின் அருகிலேயே படுத்து தூங்கினால்.
சடலத்துடன் சிறுவன்:
நான்கு நாட்களாக தாய் ஊற்குவதாக அந்த சிறுவன் எண்ணி வந்த நிலையில், பிரிட்ஜ் மற்றும் சமையலறையில் இருந்த பொருட்களை மட்டும் சாப்பிட்டு இருந்துள்ளான். அதேபோல் அன்றாடம் தானே குளித்து சீருடை அணிந்து பள்ளிக்கு சென்று வந்துள்ளான் சிறுவன். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை இறந்து கிடந்த அவனின் தாயின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் பயந்துபோன அந்த சிறுவன் தனது மாமாவுக்கு தொலைபேசியில் அழைத்து அம்மாவின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கூறினார். இதேபோல சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினரும் ராஜலட்சுமி வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது ராஜலட்சுமி படுக்கை அறையில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். அங்கு சிறுவன் மட்டும் தனியாக இருந்தான் அதைக் கண்டு அதிர்ந்துபோன அவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை:
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலையில் சிறுவன் கிஷோர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அந்த சிறுவன் தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறான். இது குறித்து சிறுவனிடம் விசாரித்த போது மார்ச் 8ஆம் தேதி அவரது தாயார் வாத்தி எடுத்ததாகவும் ஆண்டிலிருந்து அவர் தூங்கிக் கொண்டிருந்ததாக அவன் கூறினான். முதற்கட்ட விசாரணையில் மார்ச் 8-ஆம் தேதி அந்த பெண் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். நான்கு நாட்கள் தாயின் சடலத்துடன் சிறுவன் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.