இனியும் ஆளுநர் காலம் தாழ்த்துவது நல்லதல்ல.. உடனே ஒப்புதல் கொடுங்க.. டிடிவி.தினகரன்.!

By vinoth kumar  |  First Published Mar 23, 2023, 2:10 PM IST

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான  தடை சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள நிலையில் இந்த மசோதா மீண்டும் சட்டப்பேரவையில்  நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 


ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தடை சட்ட மசோதா மீண்டும் தமிழக சட்டப்பேரவையில்  ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டிருப்பதை வரவேற்கின்றேன் என  டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2  முறை தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதை பல மாதங்களாக கிடப்பில் போட்டுவிட்டு ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த 6-ம் தேதி சட்ட மசோதாவை தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார்.

Latest Videos

இதனையடுத்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்ற தமிழக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ததை அடுத்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்று வருகின்றனர். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தடை சட்ட மசோதா மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டிருப்பதை வரவேற்கின்றேன்.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான  தடை சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள நிலையில் இந்த மசோதா மீண்டும் சட்டப்பேரவையில்  நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தடை சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள நிலையில் இந்த மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. (2/3)

— TTV Dhinakaran (@TTVDhinakaran)

ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தமிழ்நாட்டில் பலர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் மக்களின் உயிர் பிரச்னையாக கருதப்படும் இந்த மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல்  உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

click me!