மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மனைவியும், முதல்வர் ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாவை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மனைவியும், முதல்வர் ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாவை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார்.
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என கூறி வந்த தமிழிசைக்கு பாஜக மேலிடம் தெலங்கானாவுக்கு ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பும் வழங்கப்பட்டது. ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டாலும் அனைவரும் அணுகும் வகையில் எளிமையானராகவே செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலபுரம் கோயிலுக்கு சென்ற அவர் அங்கு முதல்வர் ஸ்டாலினின் சகோதரியை சந்தித்து கோபாலபுரம் வீட்டுக்கும் சென்று வந்துள்ளார். அப்போது, தயாளு அம்மாளிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
இதையும் படிங்க;- நடிகை மீனாவை காதலித்தாரா திருமாவளவன்.?? திருமணம் செய்துகொள்ளும் மூடில் சிறுத்தைகள் தலைவர்.??
undefined
இதுதொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலபுரம் கிருஷ்ணர் கோயில் சென்றேன். திரும்பும்போது தமிழக முதல்வர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரி திருமதி.தமிழ்ச்செல்வி அவர்களை சந்தித்தேன். மரியாதை நிமித்தமாக இல்லத்திற்கு சென்று திருமதி.தயாளு அம்மாளை சந்தித்து உடல் நலம் விசாரித்தேன்.
இதையும் படிங்க;- மக்களே அலர்ட்.. 100 யூனிட் இலவச மின்சாரம்.. இனி கிடையாதா..? அமைச்சர் சொன்ன பரபரப்பு தகவல்.
இதற்கு முன்பு மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுடன் கலைஞர் அவர்களின் உடல் நலம் விசாரிக்க இதே இல்லத்திற்கு நான் வந்த நினைவு நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள் என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுடன் கலைஞர் அவர்களின் உடல் நலம் விசாரிக்க இதே இல்லத்திற்கு நான் வந்த நினைவு நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.(2/2)
(File Photo) pic.twitter.com/KsIuOBVCa8