எடப்பாடி பழனிச்சாமி தற்குறி, தவக்களை; விரைவில் அரசியல் அனாதை ஆவார் இறங்கி அடிக்கும் நாஞ்சில் சம்பத்..!

By vinoth kumar  |  First Published Aug 19, 2022, 6:38 AM IST

எடப்பாடி பழனிசாமி  வெகு சீக்கிரம் தமிழ்நாட்டு அரசியலில் அனாதை ஆவார். ஓபிஎஸுக்கு அதிமுகவைக் காக்கும் மிகப் பெரிய ஒரு பொறுப்பை நீதிமன்றம் கொடுத்துள்ளது. சசிகலாவை ஆதரிக்கும் மனநிலையிலேயே அவர் உள்ளார்.


 ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவைக் காக்கும் மிகப் பெரிய ஒரு பொறுப்பை நீதிமன்றம் கொடுத்துள்ளது என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

கடலூரில் கடந்த 2018ம் ஆண்டு டிடிவி. தினகரன் அணி சார்பில் நடைபெற்ற பொதுக்குழுவில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அவதூறாக பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நாஞ்சில் சம்பத் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனையடுத்து, செய்ததியாளர்களுக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத்;- அதிமுகவின் அசைக்க முடியாத தலைவர் என்று நாடகமாடிய எடப்பாடி பழனிசாமிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ராமச்சந்திரன்.. ஜெயலலிதா.. ஜெயச்சந்திரன்.. அதிமுகவை காக்கும் ரூபங்கள்.. புல்லரிக்கும் ஓபிஎஸ் மகன்..!

தமிழ்நாட்டு அரசியலில் எந்த அதிர்வையும் உருவாக்கக்கூடிய ஆற்றலோ, திறமையோ, அறிவோ எடப்பாடி பழனிச்சாமிக்கு என்கிற தற்குறிக்கு இல்லை. தவக்களைக்கு இல்லை என கடுமையாக விமர்சித்தார். முதலமைச்சர் பதவியை கொடுத்து முடி சூட்டிவிட்டு சிறைக்கு சென்ற சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியவர்தான் இந்த எடப்பாடி பழனிசாமி. தமிழக அரசியலில் இவரால் எந்தக் காலத்திலும் வெற்றி பெற முடியாது.

பத்தாண்டு காலத்தில் அடித்த இன்னும் ஐந்து பொதுத் தேர்தல்களை சந்திக்கிற அளவிற்கு கொள்ளையடித்து குவித்து வைத்திருக்கிற பணத்தை வைத்துக்கொண்டு பொதுக்குழு உறுப்பினர்கள் என்ற பெயரால் பொதுக்குழுவை கூட்டி நடத்திய நாடகத்திற்கு உயர்நீதிமன்றம் முடிவுகட்டியுள்ளது. பணத்தை வைத்து ஒன்றைரை கோடி தொண்டர்களை கொண்ட கட்சியை கைப்பற்ற முயன்ற எடப்பாடிக்கு உயர் நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

இதையும் படிங்க;-  நீங்க தர்மயுத்தம் தொடங்கியதே சசிகலாவுக்கு எதிராக தான்.. ப்ளாஸ்பேக்கை சொல்லி ஓபிஎஸ்ஐ அலறவிடும் கே.பி.முனுசாமி.!

எடப்பாடி பழனிசாமி  வெகு சீக்கிரம் தமிழ்நாட்டு அரசியலில் அனாதை ஆவார். ஓபிஎஸுக்கு அதிமுகவைக் காக்கும் மிகப் பெரிய ஒரு பொறுப்பை நீதிமன்றம் கொடுத்துள்ளது. சசிகலாவை ஆதரிக்கும் மனநிலையிலேயே அவர் உள்ளார். சசிகலா பிறந்தநாளில் உயர்நீதிமன்ற தீர்ப்பு அவருக்கு நம்பிக்கை அளித்து இருக்கும் எனவும் தெரிவித்தார்.

click me!