இனி மாதம்தோறும் 1,05,000 ரூபாய்..! கொரோனா நிவாரணம் அளிக்கும் ஆளுநர் தமிழிசை..!

Published : Apr 07, 2020, 09:18 AM ISTUpdated : Apr 07, 2020, 10:32 PM IST
இனி மாதம்தோறும் 1,05,000 ரூபாய்..! கொரோனா நிவாரணம் அளிக்கும் ஆளுநர் தமிழிசை..!

சுருக்கம்

நாட்டின் நிலைமை சீராகும் வரையில் மாதம் தனது சம்பளத் தொகையில் 30 சதவீதம் பிடித்துக் கொள்ள ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார். 

உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 4,281 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 111 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது.

இதனிடையே கொரோனா நிவாரண நிதி அளிக்குமாறு மத்திய அரசு நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. மக்கள் தங்கள் நிவாரண நிதியை நேரடியாக PM CARE FUND என்கிற வங்கிக்கணக்கில் செலுத்தலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி பொதுமக்கள், முன்னணி நிறுவனங்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சிகள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் நாட்டின் நிலைமை சீராகும் வரையில் மாதம்தோறும் கொரோனா நிதியுதவி அளிப்பதாக கூறி இருக்கிறார்.

இதுகுறித்து இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அவர் கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், நாட்டின் நிலைமை சீராகும் வரையில் மாதம் தனது சம்பளத் தொகையில் 30 சதவீதம் பிடித்துக் கொள்ள கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி மாதத்திற்கு 1 லட்சத்தி 5,000 ரூபாய் தனது கணக்கில் பிடித்தம் செய்யப்பட்டு, அந்த தொகையானது பிரதமரின் பொது நிவாரண நிதியில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் குடியரசு தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!