டெல்லியில் ரேசன்கார்டு இல்லாத ஏழைகளுக்கு நாளை முதல் ரேசன் பொருள்கள் விநியோகம். முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு.!

By Thiraviaraj RMFirst Published Apr 6, 2020, 10:11 PM IST
Highlights

கடந்த மாதம் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. 

  T.Balamurukan

கடந்த மாதம் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,281-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 704 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4,281 பேரில் 1445 பேர் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள். 

கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "டெல்லியில் ரேஷன் கார்டு இல்லாத ஏழைகளுக்கு நாளை முதல் 421 அரசுப் பள்ளிகளில் ரேசன் விநியோகிக்கப்படும். ஒவ்வொரு நபருக்கும் 4 கிலோ கோதுமை மற்றும் ஒரு கிலோ அரிசி கிடைக்கும். இதுபோன்று 10 லட்சம் பேருக்கு ரேசன் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம், தேவைப்பட்டால் மத்திய அரசிடம் கூடுதல் தானியங்களைக் கேட்டுப் பெறுவோம் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

click me!