
தமிழகத்தில் அ.தி.மு.க. இரண்டாக பிளவு பட்டிருக்கும் நிலையில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவர்னரை சந்தித்து பேசினார்.
அவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எம்.எல்.ஏ.க்களை மீட்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுபற்றி விசாரிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன், டி.ஜி.பி. ராஜேந்திரன் இன்று சந்தித்து பேசினார்.
இதைதொடர்ந்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் ஆணையர் ஜார்ஜ், உளவுப்பிரிவு கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் ஆகியோரும் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து 3 பக்க அறிக்கையை ஆளுநர் வித்யாசகர் ராவ் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார்.
தலைமை செயலக அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கொடுத்த தகவல்கள் குறித்தும் எம்.எல்.ஏக்கள் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் வந்த தகவலையும் அறிக்கையில் ஆளுநர் குறிபிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் சசிகலா மீதான சொத்துகுவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது என்பதையும், தற்போதைய சூழ்நிலையில் சசிகலாவை பதவியேற்க அழைக்க இயலாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது முடிவு குறித்து அறிக்கையில் குறிபிடப்படவில்லை என்பது பொதுமக்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.