
தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் பொங்கி எழுந்தமையால் அரசியல் வானில் சுதந்திர கொடி பறக்க தொடங்கியுள்ளது.
இருந்தாலும் ஆளுநரின் மவுனம் சசிகலா தரப்பில் ஒரு கதிகலப்பை உருவாக்கத்தான் செய்கிறது.
ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர் காப்பாற்றுவார் என நம்புகிறேன்.
அதிமுகவிற்கு தோல்வியே கிடையாது.
அனைவரின் ஒத்துழைப்போடும் அதிமுக மென்மேலும் வளரும்.
ஆட்சியையும், கட்சியையும் நிச்சயம் காப்போம் என்று சசிகலா அவரது ஆதரவு நிர்வாகிகளிடையே வாசித்து கொண்டிருக்கிறார்.
அவர் இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னால் ஜெயலலிதாவால் கட்டி காத்த அதிமுக இயக்கத்தினை, ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இந்த இயக்கத்தினை நிச்சயம் காப்போம்.
இந்த இயக்கம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என ஜெயலலிதா கூயுள்ளார்.
அதனடிப்படையில் இன்று மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள் கையில் ஆட்சி நிலைக்கும்.
அதிமுகவை கைப்பற்ற விடமாட்டோம், உறுதியாக நல்லது நடக்கும்.
அதிமுகவை கைப்பற்றி விடலாம் என்ற சிலரின் எண்ணம் நிறைவேறாது.
அதிமுக தொண்டர்களின் சொத்து தனி குடும்பத்தின் சொத்தாக மாறாது.
என தெரிவித்தார்.
யார் கையில் ஆட்சி போக இருக்கிறது. மக்களின் விருப்பத்திற்கு யார் மதிப்பு கொடுப்பார்கள். ஆளுநரின் அடுத்தகட்ட முடிவு என்ன்னவாக இருக்கும்.
இவை அனைத்தையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டி உள்ளது.