
பெரும்பான்மையாக 130 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் இருக்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவைத்தான் தமிழக சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் அரங்கேறி இருக்கிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவை, அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூடி, சட்டசபைத் தலைவராக தேர்வு செய்து, முதல்வராக அமர்த்த உள்ளனர்.
அதே சமயம், சசிகலாவை பொதுச் செயலாளராவும், முதல்வராகவும் முன்மொழிந்த, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கி, தனது தலைமையில் ஒரு அணியாக உருவாக்கி செயல்படுகிறார்.
இரு பிரிவினரும் தனித்தனியாக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்துள்ளதால், அடுத்த யார் ஆட்சி அமையும்? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த முதல்வர் பன்னீர் செல்வம் அவருடன் ஏறக்குறைய 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.
ஏனென்றால், தற்போது அவருக்கு ஆதரவாக, 5 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே அவருக்கு ஆதரவு தருகின்றனர்.
ஆதலால், 5 நாட்களுக்குள் தனக்கு போதுமான உறுப்பினர்கள் ஆதரவைப் பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஆளுநரிடம் பன்னீர் செல்வம் மனு ஒன்றை அளித்தார். அதில், தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை பெற்றனர், ராஜினாமாவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்,
சசிகலாவுக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
மேலும், சசிகலா தனது கட்டுப்பாட்டில் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் அடைத்து வைத்து, வலுக்கட்டாயமாக கையொப்பம் பெற்றுள்ளார். ஆதலால், கையொப்பத்தை சரிபார்க்க வேண்டும் என்றும் முதல்வர் பன்னீர் செல்வம், ஆளுநரிடம் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பன்னீர் செல்வம் சந்தித்துவிட்டு சென்றபின், ஏறக்குறைய 2½ மணி நேரம் கழித்து, சசிகலாவும், மூத்த அமைச்சர்களும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.
அப்போது, தனக்குத்தான் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் இருக்கிறது,
முதலமைச்சராக பதவி ஏற்க தனக்கு அழைப்பு விடுக்க வேண்டும், சட்டசபையில் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கிறது,
அவ்வாறு நிரூபிக்க சொன்னால் நிரூபிப்பேன், அதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று சசிகலா, ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அளித்த மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சசிகலாவுக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.க்களின் கடிதங்களை ஆய்வு செய்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆட்சி அமைக்க முதலில் உங்களை அழைக்கிறேன் என்று உறுதி அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், எம்.எல்.ஏ.க்களின் கையொப்பம் இடப்பட்ட நகலை கேட்டபோது, அதை சசிகலா தேவையான அனைத்து ஆவணங்களையும் அளித்துள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம் அணியில் 5 எம்.எல்.ஏ.க்கள் கூட இல்லை, ஆனால், தனக்கு 130 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
இதனால், ஆட்சி அமைக்க சசிகலாவை முதலில் அழைப்பதாக ஆளுநர்வித்யாசாகர் ராவ் கூறியுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்ட வல்லுநர்களுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
இப்போதுள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வத்துக்கு தான் முதல்வராக வரமுடியாவிட்டாலும் சசிகலா முதல்வராக வரக்கூடாது என்றே காய்களை நகர்த்தி வருகிறார்.
இதை வைத்து ஓ.பன்னீர்செல்வம் காய்களை நகர்த்தி வருகிறார்.
ஆனால், அரசியல் சாசனப்படி, எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற சசிகலாவை பதவி ஏற்கவே ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.