சனாதன தர்மம், இந்து மதம் குறித்த ஆளுனரின் பேச்சுகள் RTI-ல் வராது.. ஆளுநர் மாளிகை பதில்.

Published : Oct 15, 2022, 02:40 PM ISTUpdated : Oct 15, 2022, 03:25 PM IST
சனாதன தர்மம், இந்து மதம் குறித்த ஆளுனரின் பேச்சுகள் RTI-ல் வராது.. ஆளுநர் மாளிகை பதில்.

சுருக்கம்

சனாதன தர்மம் இந்து மதம் அதன் அர்த்தம் குறித்து ஆளுநர்  பேசிய தகவல்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது . 

சனாதன தர்மம், இந்து மதம் அதன் அர்த்தம் குறித்து ஆளுநர்  பேசிய தகவல்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துரைசாமி, சனாதன தரமம், இந்து  மதம்  குறித்து விளக்கம் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிக்க ஆளுநருக்கு மனு அனுப்பியிருந்த நிலையில் ஆளுநர் மாளிகை இவ்வாறு விளக்கமளித்துள்ளது. 

தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி பொறுப்பேற்றது முதலிருந்தே தமிழக அரசுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறார். அவருடைய பேச்சுக்கள், செயல்பாடுகள் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் எதிராகவே இருந்து வருவதாக எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படுகிறது. தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மற்றும்  கோப்புகளில் கையொப்பமிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார் என்று விமர்சனம் அவர் மீது உள்ளது.

இதுவரை எந்த ஆளுநரும் செய்யாத அளவிற்கு அவர் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்து மதம், சனாதன தர்மம் குறித்து அவர் உரையாற்றி வருகிறார். இது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆர்.என் ரவி மாநில ஆளுநருக்கான மாண்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அரசியல்வாதி போல் நடந்துகொள்ளக் கூடாது என  பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: மோடி அமித்ஷா தாய்மொழி குஜராத்தி, ஓட்டுக்காக இந்தியை திணிக்க முயற்சி செய்கிறார்கள்.. தயாநிதி மாறன்.

ஆனால், அவர் மேடை தோறும் இந்து தர்மம், சனாதன தர்மம் திருக்குறள் ஆன்மீகம் என பேசி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். துரைசாமி என்பவர், ஆகஸ்ட் 19ஆம் தேதி ஆளுநர் பேசிவரும் சனாதன தர்மம் ஹிந்து மதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளிக்க கோரி தமிழக ஆளுநருக்கு மனு ஒன்றை அனுப்பினார்.

இதையும் படியுங்கள்:  Chidambaram: இந்துத்துவா,இந்தித் திணிப்பு மட்டும் பட்டினியைப் போக்கிவிடுமா?பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

அதில், சனாதனம் குறித்து அதிகம் பேசும் நபராக இருப்பதால் அது தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க சரியான நபர் நீங்களாகத்தான் இருக்கக்கூடும் என  கருதுவதால், கீழ்க்காணும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என 19 கேள்விகளை முன்வைத்திருந்தார் வழக்கறிஞர் துரைசாமி.

அதில், சனாதன தர்மம் என்றால் என்ன? அதன் கொள்கைகள் என்ன? அதை உருவாக்கியவர் யார்? வேறு எந்த நாட்டிலாவது அது பின்பற்றப்படுகிறதா? பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ளதா? ஆர்எஸ்எஸ் அமைப்பில் நீங்கள் உறுப்பினராக இருக்கிறீர்களா? தமிழக அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் பொது நிகழ்ச்சியில் பேச உங்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தில் எந்த விதியில் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது?

இந்துக்கள் என்றால் யார்? இப்படி பல கேள்விகளை அவர் முன்வைத்திருந்தார். தற்போதைய கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பின்னர் வழக்கறிஞர் துரைசாமியின் கேள்விகளுக்கு  ஆளுநரின் சார்பில் அவரின் சார்புச் செயலாளர் சி.ரமா பிரபா  அவரின் பெயரில் ஒரு விளக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஆளுநர் அவர்களுக்கு நீங்கள் அனுப்பிய கடிதத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கான பதில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படவேண்டிய எந்த வடிவத்திலும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் தகவல் கொடுக்கும் வகையில் இது இல்லை. அது குறித்தான தகவல்கள் ஆளுனர் செயலகத்தில் இல்லை. இவ்வாறு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வழக்கறிஞர் துரைசாமி எழுப்பிய கேள்விகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்றும் அது தொடர்பான தகவல்கள் ஆளுநரின் செயலகத்தில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!