இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம்..! இங்கே மட்டும் எதிர்கிறார்கள்.! தமிழ்நாடு நோ.! தமிழகம் ஓகே-ஆர் என் ரவி

By Ajmal Khan  |  First Published Jan 5, 2023, 10:19 AM IST

ஆங்கிலேயர் கொண்டு வந்த பாடத்திட்டத்தின் கீழ் படித்த பலரும்  இன்றளவும் காலனி ஆதிக்கம் மனப்பான்மையிலேயே, தாழ்வு மன நிலையிலேயே இருக்கிறார்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.


காசி தமிழ் சங்கம்-பாராட்டு விழா

காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு சார்பாக  ஒருமாத கால ‘காசி தமிழ் சங்கமம்’நிகழ்ச்சி, வாரணாசியில் நடைபெற்றது. நவம்பர் 17ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி டிசம்பர் 16 ஆம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெற்றது.  இந்த நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனையடுத்து காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த செய்தோரைக் கெளரவிக்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டினார். 

Latest Videos

இரண்டு மாஜி எம்எல்ஏக்களுக்கு அமைப்பு செயலாளர் பதவி..! இபிஸ் அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஓபிஎஸ்

தமிழகத்தில் வித்தியாசமான சூழல்

அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஆர்.என்.ரவி, ஆங்கிலேயர் இந்த மண்ணை ஆட்சி செய்திருக்காவிடில்  பலர் கல்வி கற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்காது என ஒரு சிலர் கூறுவதை குறிப்பிட்டு பேசினார்.  அப்படி பேசுபவர்களை பார்த்தால் பாவமாக இருப்பதாக தெரிவித்தார். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சி செய்வதற்கு முன்பே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழகத்தில் படைக்கப்பட்டிருக்கும் இலக்கியங்களும், ஆன்மீகப் படைப்புகளும் பிரம்மிக்க வைக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் வித்தியாசமான ஒரு அரசியல் சூழல் உள்ளதாகவும் தாங்கள் திராவிடர்கள் என்று சொல்லிவருவதாகவும் குறிப்பிட்டார். 

தமிழ்நாடு நோ- தமிழகம் ஓகே

தமிழ்நாடு எனக் கூறுவதை விட தமிழகம் எனக் கூறுவதே சரியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால் தமிழ்நாடு மட்டும் அதை வேண்டாம் என எதிர்ப்பதாகவும் கூறினார். ஆங்கிலேயர் கொண்டு வந்த பாடத்திட்டத்தின் கீழ் படித்த பலரும் பெரிய பதவிகளில் இருக்கும் பலரும் இன்றளவும் காலனி ஆதிக்கம் மனப்பான்மையிலேயே, தாழ்வு மன நிலையிலேயே இருக்கிறார்கள் என தெரிவித்தார். அடுத்த 25 ஆண்டுகளில், இந்த உலகத்தை வழி நடத்தும் பொறுப்பில் இந்தியா இருக்கும் எனவும் ஆளுநர் ரவி நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

உதயநிதி மகனின் புகைப்படத்தை கசியவிட்டது அண்ணாமலை டீம்..! காயத்திரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு

click me!