பிரதமருடன் தமிழக ஆளுநர் ரவி இன்று மீட்டிங்..! நீட் விலக்கு குறித்து முக்கிய ஆலோசனை…?

Published : Oct 23, 2021, 08:06 AM IST
பிரதமருடன் தமிழக ஆளுநர் ரவி இன்று மீட்டிங்..! நீட் விலக்கு குறித்து முக்கிய ஆலோசனை…?

சுருக்கம்

தமிழகத்தின் ஆளுநரான ஆர்.என். ரவி பிரதமர் மோடியை இன்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

டெல்லி: தமிழகத்தின் ஆளுநரான ஆர்.என். ரவி பிரதமர் மோடியை இன்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர். என். ரவி கடந்த 23ம் தேதி டெல்லி சென்றார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகியோரை சந்தித்தார்.

இந் நிலையில் பிரதமர் மோடியை அவர் இன்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அவர் சந்திப்பார் என்று தெரிகிறது.

இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம், நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து பேசுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று மாலை டெல்லி சென்ற அவர் அனைத்து சந்திப்புகளையும் முடித்துவிட்டு ஓரிரு நாளில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

அமைச்சரின் இலாகா தெரியாமல் பேசுகிறார் அண்ணாமலை..! ஊராட்சி செயலாளர் பணியில் மோசடி இல்லை..! அடித்துச் சொல்லும் அதிகாரிகள்..!
தமிழகத்தை பாலைவனமாக்க காங்கிரஸ் டார்கெட்.. லாலி பாடும் திமுக அரசு.. இபிஎஸ் ஆவேசம்!