ஆளுநர்- ரஜினி அரசியல் பேசியதில் தப்பே இல்ல.. நாடு உருப்பட அரசியல் பேசணும்.. சீமான் அடித்த அந்தர் பல்டி .

By Ezhilarasan BabuFirst Published Aug 11, 2022, 4:48 PM IST
Highlights

ஆளுநரை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசியதில் தவறு ஏதும் இல்லை என்றும், யார் வேண்டுமானாலும் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசலாம் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

ஆளுநரை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசியதில் தவறு ஏதும் இல்லை என்றும், யார் வேண்டுமானாலும் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசலாம் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி அரசியல் பேசியதாக  கூறியதை பலரும் விமர்சித்து வரும் நிலையில் சீமான் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசியலுக்கு இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என ரசிகர்களை அலைகழித்து வந்த ரஜினிகாந்த், கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அரசியலுக்கு வரப்போவதில்லை என உறுதிபட தெரிவித்தார். அது அவரது ரசிகர்கள் மட்டும் இன்றி பாஜகவினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  ஆனால் அதுவரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினியை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார்.

வேறுமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தமிழகத்தை ஆள துடிக்கக் கூடாது, யார் வேண்டுமானாலும் தமிழகத்துக்கு வரலாம், வாழலாம் ஆனால் தமிழகத்தை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும் எனக் கூறி வந்தார். மற்றவர்களை காட்டியில் ரஜினியை மிக கடுமையாக விமர்சித்து வந்தார் சீமான், இந்நிலையில்தான் ஆளுநருடன் அரசியல் பேசினேன் எனக்கூறிய விவகாரத்தில் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: அதிமுக பொதுக்குழு செல்லுமா.? செல்லாதா.? நீதிமன்றத்தில் காரசார விவாதம்..! தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி

மாலைமுரசு நிறுவனர்  இராமச்சந்திர ஆதித்தனாரின் 82வது பிறந்த  நாளையொட்டி மாலைமுரசு அலுவகத்தில் வைக்கப்பட்டது அவருடைய படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார் அதன் விவரம் பின்வருமாறு:-

இதையும் படியுங்கள்:  நிதிக்கட்டுப்பாடு அவசியம்; இந்தியா போன்ற வறுமை நாட்டில் இலவசங்களை நிராகரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்று கொண்டவர் ராமச்சந்திர ஆதித்தனார், ஈழப் போர் தொடர்பான செய்திகளை வெளியிட பலர் தயங்கியபோது, அதை வெளியிட்டு தான் பிறந்த இனத்தின் கடமையை செய்தவர் அவர், அரசியல் என்பது வாழ்வியல், அனைத்து இடத்திலும் அது எப்போதும் பேசப்படுகிறதோ அப்போதுதான் இந்த நாடு உருப்படும், எனவே ஆளுநரை சந்தித்த ரஜினி அரசியல் பேசியது தவறு இல்லை. யார் வேண்டுமானாலும் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசலாம். அரசியல் பேசாதவன் மனிதனாகவே இருக்க முடியாது என்கிறார்கள் காந்தி,

மனிதனின் உரிமைக்காக பேசும் அனைத்துமே அரசியல்தான், அந்த உரிமை ரஜினிகாந்த்துக்கு இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் ஆளுநரை நியமித்துள்ளார். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்பது தவறு, ஆனால் ஆளுநருடன் அரசியல் பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை, மத்திய அரசு சுதந்திர தினத்தன்று எல்லாருக்கும் வீடு இருக்கும் என்று கூறினீர்களே, இதா அந்த வீட்டைக் காட்டுங்கள். ஒரு துணியால் கொடி ஏற்றிவிட்டால் நாட்டுப்பற்று வந்துவிடுமா, இந்த நாட்டுக்கு சொந்தமாக பிலைட் இருக்கிறதா? ஏர்போர்ட் 4,500 ஏக்கரில் கட்டினாலும் அதை தனியாருக்குதான் தாரை வார்க்க போகிறீர்கள். இவ்வாறு சீமான் கூறினார்.
 

click me!