கருஞ்சட்டை போட்ட பெரியார் தமிழகத்தின் நம்பிக்கை பெற்றாரே.. மோடிக்கு ப.சி.யின் மாஸான பதிலடி.!

By vinoth kumarFirst Published Aug 11, 2022, 12:59 PM IST
Highlights

கருப்பு சட்டை அணிவோர் மக்கள் நம்பிக்கையை பெற மாட்டார்கள் என பிரதமர் மோடி கூறியதற்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். 

கருப்பு சட்டை அணிவோர் மக்கள் நம்பிக்கையை பெற மாட்டார்கள் என பிரதமர் மோடி கூறியதற்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். 

விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கடந்த 5ம் தேதி கருப்புச் சட்டை அணிந்து நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தில் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர்.

இதையும் படிங்க;- rahul: national flagindia: ரேஷன் கடைகளில் தேசியக் கொடி கட்டாய விற்பனை: ராகுல் கொந்தளிப்பு: மத்திய அரசு மறுப்பு

இதனை கேலி செய்யும் வகையில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசினார். அப்போதுது, கடந்த 5ம் தேதி சிலர் கறுப்பு மேஜிக்கில் ஈடுபட்டனர். கறுப்பு ஆடை அணிந்து தங்கள் விரக்தியை போக்கலாம் என நினைக்கிறார்கள். கறுப்பு மேஜிக்கின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களால் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது. கறுப்பு மேஜிக், சூனியம், மாந்தரீகம் ஆகியவற்றில் ஈடுபட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது எனத் தெரிவித்தார்.

பிரதமரின் இந்த கருத்துக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், கருப்புச் சட்டை அணிவோர் மக்கள் நம்பிக்கையை பெற மாட்டார்கள் என பிரதமர் மோடி கூறியதற்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.

 

கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்

தந்தை ஈ வெ ரா பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார். அவர் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் (சனாதனவாதிகளைத் தவிர) என்பதை நாடறியும்

— P. Chidambaram (@PChidambaram_IN)

 

 

இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தந்தை ஈவெரா பெரியார் தம் வாழ்நாள் முழுவதும் கருப்புச் சட்டையை அணிந்தார். அவர் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். சனாதன தர்மத்தை நம்புவோரைத் தவிர தமிழ்நாட்டில் அனைத்து மக்களின் நம்பிக்கையை சம்பாதித்தவர் பெரியார் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க;- rahul: modi: பிரதமர் பதவிக்கான தரத்தைக் குறைக்காதீர்கள்: பிரதமர் மோடியை விளாசிய ராகுல் காந்தி

click me!