14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தங்கர் இன்று பதவி ஏற்றார்.. முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

By Ezhilarasan BabuFirst Published Aug 11, 2022, 12:54 PM IST
Highlights

இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தங்கர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார், அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 
 

இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தங்கர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார், அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

நாட்டில் 14ஆவது துணைக் குடியரசுத் தலைவராக மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தங்கர் இன்று பதவியேற்றுக்கொண்டார். 13வது துணைக் குடியரசுத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடு பதவிக்காலம் நிறைவடைந்ததை ஒட்டி துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்று பெற்று ஜெகதீப் தாங்க குடியரசுத் தலைவராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

சமீபத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது, அதில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த  திரௌபதி முர்மு வேட்பாளராக களமிறங்கப்பட்டார். அதில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தங்கர் களமிறக்கப்பட்டார்.

இதுபோல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்க்கெட் அல்வா களமிறக்கப்பட்டார். இதில் அதிபெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தங்கர் வெற்றிபெற்றார். தொடர்ந்து அவருக்கு பல தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

LIVE: Swearing-in-Ceremony of the Vice President-elect Shri Jagdeep Dhankhar https://t.co/GRqc2YZE0A

— President of India (@rashtrapatibhvn)

இதையும் படியுங்கள் : rahul: modi: பிரதமர் பதவிக்கான தரத்தைக் குறைக்காதீர்கள்: பிரதமர் மோடியை விளாசிய ராகுல் காந்தி

இந்நிலையில் இன்று நாட்டில் 14ஆவது துணைக் குடியரசுத் தலைவராக ஜெகதீஷ் தாங்கர் பதவியேற்றுக்கொண்டார். பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் அமித் ஷா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், மற்றும் எதிர்கட்சித் தலைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள் : கருஞ்சட்டை போட்ட பெரியார் தமிழகத்தின் நம்பிக்கை பெற்றாரே.. மோடிக்கு ப.சி.யின் மாஸான பதிலடி.!

தங்கர் பாஜகவின் வழக்கறிஞர் தனிப்பிரிவில் அரசியல் தொடங்கினயவர் ஆவார்,  ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அவர், 1989 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றார். அப்போது  சந்திரசேகர் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பதவி வகித்தார்.

ஆனால் இரண்டே ஆண்டுகளில் 1993 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார், பின்னர் 2019 ஆண்டு மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார், அங்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா- ஜெகதீஷ் தங்கர் இடையே மோதல் நீடித்து வந்தது.  இந்நிலையில் ஆளும் பாஜக சார்பில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார், அதில் வென்று நாட்டின் 14வது துணை குடியரசுத் தலைவராக அவர் இன்று பதவி ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.  

LIVE: to take oath of office as 14th Vice President of India, President to administer oath https://t.co/YfEtaItjF7 pic.twitter.com/cZu4bxpcyP

— DD News (@DDNewslive)
click me!