கவர்னரையே டென்ஷனாக்கிய அட்டைப்படம்... ஏர்போர்ட்டுக்கே சென்று தூக்கிய பின்னணி தகவல்கள்...

By vinoth kumarFirst Published Oct 9, 2018, 5:15 PM IST
Highlights

துணை பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தை பல பத்திரிகைகளும் மறந்துவிட்ட நிலையில், இவ்வழக்கு விசாரணை குறித்து நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டு வருகிறது.

துணை பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தை பல பத்திரிகைகளும் மறந்துவிட்ட நிலையில், இவ்வழக்கு விசாரணை குறித்து நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டு வருகிறது. நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக செய்திகள் வராத நக்கீரன் இதழே இல்லை எனும் அளவுக்கு செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. அண்மையில் வெளியான நக்கீரன் இதழில், ஆளுநர் பன்வாரிலாலை, நிர்மலா தேவி 4 முறை சந்தித்ததாக செய்தி வெளியானது.

 

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான நக்கீரன் வார இதழின் அட்டைப்படத்தில், பொறியில் சிக்கிய கவர்னர்! சிறையில் நிர்மலாவுக்கு ஆபத்து! என்று வெளியாகியிருந்தது. இந்த தலைப்பில் வெளியான கட்டுரையின் அடிப்படையிலேயே நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிர்மலா தேவி, போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தான் 4 முறை ஆளுநரை சந்தித்ததாக கூறப்படுகிறது.

 

இது குறித்து நக்கீரன் இதழில் வெளியானது. இந்த நிலையில், மறந்துபோன நிர்மலா தேவி விஷயம், நக்கீரன் இதழ் வடிவில் பெரும் குடைச்சலாக இருந்திருக்கிறது. இதன் அடிப்படையிலேயே, நக்கீரன் கோபல் மீது ஆளுநரின் செயலாளர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.  அவரது புகாரின் அடிப்படையில், புனே செல்வதற்காக விமான நிலையம் சென்றிருந்த நக்கீரன் கோபாலை, எந்தவித ஆவணமும் இல்லாமல் கைது செய்யப்பட்டார். 

ஏப்ரல் மாத நக்கீரன் இதழில் வெளியான செய்தியின் அடிப்படையிலேயே நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். சிந்தாதரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து நக்கீரன் கோபாலிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நக்கீரன் கோபாலுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் சிறையில் அடைக்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

click me!