செதுக்கி செதுக்கி த்ரிஷாவுக்காக வழிந்தாரா திருச்சி சிவா!! 'த்ரிஷா சிவா'ன்னு நாங்களே மாத்திடுவோம்... சொந்தகட்சியினரே எச்சரிக்கை!

By sathish kFirst Published Oct 9, 2018, 4:52 PM IST
Highlights

திரிஷாவின் ’96 படத்தை மூன்றே நாளில் இரண்டுமுறை பார்த்து சிலாகித்த திருச்சி சிவாவுக்கு சினிமா விமர்சகர்கள் மத்தியில் மட்டுமின்றி கட்சிக்காரர்கள் மத்தியிலும் கண்டனங்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளது. த்ரிஷாவுடன் செலவழித்த நேரத்தில் கொஞ்சமாவது எங்கள் நலனில் அக்கறை காட்டுவதில் செலுத்தினால் நல்லது’ என்று அவர் படத்துக்கு ட்வீட் போட்ட பக்கத்தில் பின்னூட்டங்களாய் விழுகின்றன.

திரிஷாவின் ’96 படத்தை மூன்றே நாளில் இரண்டுமுறை பார்த்து சிலாகித்த திருச்சி சிவாவுக்கு சினிமா விமர்சகர்கள் மத்தியில் மட்டுமின்றி கட்சிக்காரர்கள் மத்தியிலும் கண்டனங்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளது. த்ரிஷாவுடன் செலவழித்த நேரத்தில் கொஞ்சமாவது எங்கள் நலனில் அக்கறை காட்டுவதில் செலுத்தினால் நல்லது’ என்று அவர் படத்துக்கு ட்வீட் போட்ட பக்கத்தில் பின்னூட்டங்களாய் விழுகின்றன.

விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளியானது `96' திரைப்படம். இந்தத் திரைப்படம் குறித்துப் பதிவிட்டுள்ள தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும் கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா, ``என்னுடைய இத்தனை வயதில் மூன்று நாள்களுக்குள் ஒரு திரைப்படத்தை இரண்டாவது முறை பார்த்திருக்கிறேன். 

ஒரு படத்துக்கு எத்தனை கூறுகள் உண்டோ அத்தனையிலும் முத்திரை பதிக்கக்கூடிய தனித்துவம். இயக்கம், நடிப்பு, வசனம், கேமரா, இசை என எல்லாமே. குறைவான வசனங்கள், நடிகர்களின் யதார்த்தமான, உணர்ச்சி வெளிப்பாடுகள் (Expression). படப்பிடிப்பும் காட்சி அமைப்பும் நீண்ட தூர பேச்சில்லாத நடைகளும் கூட வசனம் இல்லாமலே நிறைய சொல்லுகின்றன. பாத்திரங்களின் உணர்ச்சிகள் எளிதாக, இயல்பாக நம்முடையதாகின்றன. காலை 5-50க்கு சிங்கப்பூருக்கு விமானத்தில் செல்ல வேண்டுமென்று இரவு 10 மணியளவில் கதாநாயகி சொல்கிறபோது இடைவேளை.

இப்படி துவங்கி செதுக்கி செதுக்கி த்ரிஷாவுக்காக வழிந்து வழிந்து ட்விட்டுகளை இட்டு வந்தார்.

இதை நக்கலடித்து கட்சிக்காரர்கள் பலரும் சிவாவை ஓட்ட ஆரம்பித்தனர்.

அவரின் இந்தப் பதிவு குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள தி.மு.க தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான், "96 திரைப்படம் குறித்த கொள்கை பரப்புச் செயலாளரின் கருத்து வரவேற்புக்குறியது. உங்களை நம்பி உள்ள பேச்சாளர்கள் எதிர்காலம் குறித்தும் ஒரு படம் பிடித்துக் காட்டுவது நல்லது. கருவிலிருந்தே கலைஞர் வாழ்க வாழ்க என்ற பேச்சாளர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்த வாய்ப்பு வாங்கி தராதது வருத்தம் அளிக்கிறது" என வேதனை தெரிவித்திருந்தார்.

இன்னொரு பின்னூட்டத்தில் எழுதியுள்ள பேச்சாளர் செங்கை தாமஸ், ``புகழ் அஞ்சலி செலுத்த புகழ்வெளிச்சம் தேவை. குறைந்தபட்சம் சின்னத்திரை நடிகர், நடிகையாய் இருத்தல் வேண்டும் என்ற சில தகுதிகள் நிர்ணயிக்கப்பட்ட பின்னர், புகழ் அஞ்சலி செலுத்த கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என் போன்ற உண்மைவிசுவாசிகள்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

இனியாவது ’96 படம் மற்றும் த்ரிஷா சிலாகிப்புகளை திருச்சி சிவா நிறுத்திக்கொள்ளாவிட்டால் கட்சிக்காரர்களே அவர் பெயரை 'த்ரிஷா சிவா' என்று மாற்றிவிடுவார்கள்.

click me!