விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50000 நிவாரணம் வழங்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

By Velmurugan s  |  First Published Feb 4, 2023, 4:14 PM IST

மழையால் பாதித்த நெல் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று திருவாரூரில் மழையால் பாதித்த நெல் பயிர்களை பார்வையிட்ட பின்னர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் மஞ்சக்குடி பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மழையால் பாதித்த சம்பா தாளடி நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இலங்கை பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த மழையால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 10 லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா தாளடி பயிர்களில் சுமார் மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவில் அறுவடை நடைபெற்று முடிந்துள்ளது.

மீதமுள்ள ஏழரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் திருவாரூர் மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கர் நாகப்பட்டினத்தில் 50,000 மயிலாடுதுறையில் 40,000 தஞ்சாவூரில் முப்பதாயிரம் ஏக்கர் உள்ளிட்ட 2 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.

Latest Videos

undefined

ஏற்கனவே அறுவடை செய்யப்பட்டு நெல் மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. எனவே விவசாயிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு கோவை வேளாண் பல்கலைக்கழகம் நிர்ணயித்த செலவு தொகையின் அடிப்படையில் ஐம்பதாயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு தொகை  ஏக்கருக்கு ரூ.32500 வழங்க வேண்டும். இது தவிர சேதம் அடைந்துள்ள உளுந்து பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினார்.

செந்தில் பாலாஜி எனக்கு இன்னொரு மகன்: அவர் வந்தவிட்டாலே வெற்றி உறுதி; ஈவிகேஎஸ் உருக்கம்

மது ஒழிப்பு
மேலும் கூறுகையில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் மதுக்கடைகள் மூடப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் ஒரு கடை கூட மூடப்படவில்லை. சமீபத்தில் குடியரசு தின விழாவில் ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதற்காக விருது வழங்கி பாராட்டினார். ஆனால், கரூர் மாவட்ட ஆட்சியர் டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையில் சாதனை படைத்ததாக கூறி மூன்று ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் எனவே தமிழக முதல்வர் மது ஒழிப்பு விஷயத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

மெரினாவில் இடம் கிடைக்க உதவினோம்
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு அருகாமையில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது அதனை கட்டுப்படுத்த வேண்டும். திமுக தலைவர்  கருணாநிதி மதிக்கப்பட வேண்டிய தலைவர். அவர்  இறந்தபோது மெரினாவில் அவரது உடல் அடக்கம் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்துக்கு அருகில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. அவ்வாறு உடல் அடக்கம் செய்வதற்கு அப்போது திமுகவினர் முயற்சித்த போது, பாமக சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தொடுக்கப்பட்டிருந்த வழக்கு தடையாக உள்ளது என, எங்களது வழக்கறிஞர் மூலம் நாங்கள் அறிந்து உடனடியாக அந்த வழக்கை வாபஸ் பெற செய்ததன் விளைவாகத்தான் மெரினாவில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மதுரையில் விமரிசையாக நடைபெற்ற தெப்ப திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கடலில் உரிமை கொண்டாடுவார்கள்
தற்போது கடலில் பேனா நினைவுச் சின்னம் வைக்க வேண்டும் என தமிழக அரசும் திமுகவும் முயற்சி எடுத்து வருகிறது. இது சூழலியல் சார்ந்த பிரச்சினை. இன்று இதை அனுமதித்தால் மற்ற கட்சியினரும் அமைப்பினரும் தங்களுக்கும் கடலில் உரிமை உள்ளதாக கூறி தங்களது நினைவுச் சின்னத்தை அமைக்க முற்படுவார்கள். அதற்கெல்லாம் இது ஒரு முன்னுதாரணமாக அமைந்து விடும். எனவே பேனா நினைவுச் சின்னத்தை தற்போது அவருக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்திலேயே நிறுவ வேண்டும் என்றார். இதற்கான கருத்துக்கணிப்பு கூட்டத்தில் சீமான் நடந்து கொண்ட விதம் குறித்து நான் ஏதும் கருத்து தெரிவிக்க முடியாத என தெரிவித்தார்.

2026ல் பாமக ஆட்சி
பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை 2026 இல் தமிழகத்தில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பதை இலக்காகக் கொண்டு இயங்கி வருகிறோம். அதற்கான முயற்சியை 2024 நாடாளுமன்ற தேர்தலிலேயே தொடங்கி விடுவோம். இன்னும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டு காலம் உள்ளதால் அதற்குரிய வியூகங்கள் நோக்கி பாமக பயணிக்கும் என்றார்.

click me!