காமராஜர், எம்.ஜி.ஆரை ஓவர்டேக் பண்ணும் முதல்வர் எடப்பாடி...!

By vinoth kumarFirst Published Dec 2, 2018, 5:06 PM IST
Highlights

அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் காலை உணவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் காலை உணவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். 

1954-ல் காமராஜர் ஆட்சிக் காலத்தில் மாணவர்கள் படிக்க வேண்டும் என்று இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதனால், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதேநேரம், பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. பின்னர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது சத்துணவு திட்டமாக மாற்றினார். முதலமைச்சர் குழந்தைகள் சத்துணவு திட்டம் என அதற்கு பெயர் சூட்டப்பட்டது. பின்னர் அனைத்து முதல்வர்களும் மதிய உணவு திட்டத்தை சிறப்பாக வழிநடத்தி சென்றனர்.  

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள பார்த்திபனூர் பள்ளிகளில் பயிலும் 4,819 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மணிகண்டன் அரசின் திட்டங்களை ஏளனப்படுத்தும் நோக்கில், வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்படும் படங்களை கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை என்று கூறினார். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்கு திட்டமாக பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள், மடிக்கணினி, சீருடைகள் என 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரியில் +1, +2, மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என தெரிவித்தார். 

மேலும் இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வரும் எண்ணிக்கை அதிகம் ஆகும். இதுகுறித்து மிக விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்ல அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிவித்தார்.

click me!