பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட சீக்கிரம் போனஸ் கொடுங்க...!! அறிவிப்புக்காக ஏங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்...!!

Published : Jan 06, 2020, 01:23 PM IST
பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட சீக்கிரம் போனஸ் கொடுங்க...!!  அறிவிப்புக்காக ஏங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்...!!

சுருக்கம்

 சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டோர்  குடும்பங்களில் தைத்திருநாளாம் தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் பொங்கல் போனஸ் உடனே வழங்கிட ஆவனசெய்ய வேண்டும் . 

தமிழர் திருநாளாம் பெங்கல் பண்டிகையைக் கொண்டாடிட ஆசிரியர் மற்றும்  அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கிட  வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  இது குறித்து  தெரிவித்துள்ள அச்சங்கத்தில் மாநிலத்தலைவர்  பி.கே.இளமாறன்,  தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆசிரியர் -அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ஜனவரி தொடக்கத்திலே அறிவிப்பது வழக்கம்.

இந்தாண்டு  பொங்கல் பண்டிகை நெருங்குவதால்  அறிவிப்பு எப்போதுவரும் என்ற எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள் காத்திருக்கிறோம் ,  தமிழர்த்திருநாளினை மகிழ்ச்சியோடு கொண்டாடிடும் வகையில்  பொங்கல் போனஸ்  விரைந்து வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.  

மேலும் ஆசிரியர்- அரசு ஊழியர்கள்  ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ,  சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டோர் குடும்பங்களில் தைத்திருநாளாம் தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் பொங்கல் போனஸ் உடனே வழங்கிட ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிளறோம் என தெரிவித்துள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?