தமிழ்நாட்டுக்கு இவ்வளவு நன்மையா..? பாஜக அரசை புகழ்ந்து தள்ளும் பாமக ராமதாஸ்..!

Published : Jan 06, 2020, 11:33 AM IST
தமிழ்நாட்டுக்கு இவ்வளவு நன்மையா..? பாஜக அரசை புகழ்ந்து தள்ளும் பாமக ராமதாஸ்..!

சுருக்கம்

4 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க முதல்நிலை அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் பாஜக அரசை புகழ்ந்து தள்ளியுள்ளார்.   

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு கும்பல் நுழைந்து மாணவர்கள் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்தியது.  இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’தமிழ்நாட்டில் ஏற்கனவே 9 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க முன்வந்துள்ள மத்திய அரசு, இப்போது கடலூர், அரியலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க முதல்நிலை அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது.

தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள்  மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’எனத் தெரிவித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..
டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்