அடிதூள்.. கொரோனா சிகிச்சை கட்டணத்தை மாற்றியமைத்து தமிழக அரசு அரசாணை.

By Ezhilarasan BabuFirst Published Aug 12, 2021, 9:38 AM IST
Highlights

தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கான கொரோனா சிகிச்சை கட்டணத்தை மாற்றியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்

தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கான கொரோனா சிகிச்சை கட்டணத்தை மாற்றியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் அரசால் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன், கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், சிகிச்சைக்கான கட்டணத்தை குறைத்து மாற்றியமைக்கப்பட்ட கட்டண விவரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தீவிரமில்லாத ஆக்ஸிஜன் அல்லாத படுக்கை வசதிக்கு 3,000 ரூபாயும் தீவிரமில்லாத ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கை வசதிக்கு ரூ.7,000, வெண்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.15,000 என்று கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ள கட்டணம், 2 மாதங்களுக்கு பின் மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் மூன்றாவது அலை தாக்கக்கூடும் என ஐபிஎம்ஆர் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழகரசு மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 3வது அலையின் போது  குறிப்பாக சிறுவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால்  குழந்தைகளுக்கான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட மக்கள் பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் மற்றும் அறுவை சிகிச்சை பெற்று வரும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்த நிலையில், இந்த கட்டண வரையறை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1964 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது, அதில் சென்னையில் மட்டும் 243 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!