மு.க. ஸ்டாலினின் அதிரடி அறிவிப்பு... மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தமிழிசை..!

Published : Aug 11, 2021, 09:53 PM IST
மு.க. ஸ்டாலினின் அதிரடி அறிவிப்பு... மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தமிழிசை..!

சுருக்கம்

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்புக்கு தெலங்கானா - புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வரவேற்பு தெரிவித்துள்ளார்.  

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர். முதல்வரின் அறிவிப்புக்கு தெலங்கானா - புதுச்சேரி ஆளுநர் தமிழிசையும் வரசேற்பு தெரிவித்துள்ளார். அறிவிப்பு வெளியான சற்று நேரத்திலேயே இதுதொடர்பாக தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை தினம் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. 2016-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில அரசு அங்குள்ள துறைமுகத்திற்கு நம் தமிழ் மன்னரான ராஜேந்திர சோழனின் பெயரைச் சூட்டி அவரது உருவப்படத்தையும் திறந்து பெருமை சேர்த்தது. அதேபோல, மும்பையிலிருந்து லண்டன் செல்லும் அரசின் ஏர் இந்தியா போயிங்-747 விமானத்திற்கும் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பெயர் சூட்டியது என்பதையும் மகிழ்வுடன் நினைவுகூர்கிறேன்" என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!