மதுரை மாணவி நேத்ரா படிப்பு செலவை தமிழக அரசு ஏற்கும்... தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு.!!

Published : Jun 06, 2020, 09:51 PM IST
மதுரை மாணவி நேத்ரா படிப்பு செலவை தமிழக அரசு ஏற்கும்... தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு.!!

சுருக்கம்

நேத்ராவின் கல்வி செலவுகளை தமிழக அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

   பிரதமர் மோடி பாராட்டியதை தொடர்ந்து முடிதிருத்தும் நிலையம் வைத்திருக்கும் மோகன் மற்றும் அவரது குடும்பத்தினரை சினிமா நடிகர்கள் அரசியல்கட்சிகள் என பலரும் பாராட்டி வருகின்றனர் நேத்ராவை கவுரவிக்கும் வகையில் அவரை ஜெனிவாவில் நடைபெறும் கூட்டத்தில்    பங்கேற்று பேசுவதற்காக ஐ.நா. அழைப்பு விடுத்திருக்கிறது.


 
மகள் நேத்ராவின் கல்விக்காக சேர்த்து வைத்திருந்த ரூ. 5 லட்சத்தை மதுரையை சேர்ந்த முடிதிருத்துபவர் மோகன் என்பவர் அப்பகுதியில் கொரோனா நிவாரணமாக உணவுப்பொருள்களை வழங்கினார். இதனை பிரதமர் மோடி பாராட்டியுள்ள நிலையில், அவரது மகள் நேத்ராவின் உயர்கல்வி செலவுகளை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 
நேத்ரா தற்போது 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.  ஐ.ஏ.எஸ்.  அதிகாரியாக வருவதுதான் தனது விருப்பம் என்று நேத்ரா செய்தியாளர்களிடம் கூறிவருகிறார்.பிரதமர் மோடி பாராட்டியதை தொடர்ந்து முடிதிருத்தும் கடைக்காரர் மோகன் மற்றும் அவரது குடும்பத்தினரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். நேத்ராவை கவுரவிக்கும் வகையில் அவரை ஜெனிவாவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக ஐ.நா. அழைப்பு விடுத்திருக்கிறது. 

இந்த நிலையில் நேத்ராவின் கல்வி செலவுகளை தமிழக அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக  தமிழக முதல்வர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்..
"மதுரை மாவட்டம், மேலமடை வண்டியூர் மெயின்ரோடு முடி திருத்தகம் நடத்தி வரும் மோகன் என்பவர் தனதுமகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை தனது மகளின் வேண்டுகோளுக்கிணங்க, ஏழை  எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்க செலவிட்டதற்கு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாக எனது மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் எதிர்கால படிப்பிற்கு சேமித்து வைத்திருந்த பணத்தை ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு செலவிட்டதை அங்கீகரிக்கும் வகையில் நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு
இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!