நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானம் காவல் நிலையம் வழக்கு பதிவு.!! தேவஸ்தானத்தை கலங்கப்படுத்தினாரா?

By T BalamurukanFirst Published Jun 6, 2020, 9:34 PM IST
Highlights

திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் சிவகுமார் உள்ளிட்ட பலர் மீது தேவஸ்தானம் அளித்த புகாரின் அடிப்படையில் திருமலை 2வது நகர காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் சிவகுமார் உள்ளிட்ட பலர் மீது தேவஸ்தானம் அளித்த புகாரின் அடிப்படையில் திருமலை 2வது நகர காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

"  நடிகர் சிவகுமார் திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் குறித்து வேண்டுமென்றே தாழ்த்தி தவறான வகையில் பேசியதாகவும், திருமலையில் தவறான செயல்கள் நடைபெறுவதாகவும் எனவே ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல வேண்டாம் என கூறியிருந்தாக தேவஸ்தானத்திற்கு மின்னஞ்சல் மூலம்  தமிழ்மாயன் என்பவர் புகார் கொடுத்திருந்தார். பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த நடிகர் சிவகுமார் மீது தேவஸ்தானம் அளித்த புகாரின் அடிப்படையில் திருமலை  இரண்டாவது  நகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதேபோன்று 30-6-2020 வரை ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் இல்லை என தவறான பிரச்சாரம் செய்த  மாச்சர்லா சீனிவாஸ், பிரசாந்த், முங்கரா சிவராஜு, வே 2 நியூஸ் ஷார்ட் செய்தி செயலி நிர்வாகிகள், திருப்பதி வார்தா மற்றும் கோதாவரி நியூஸ் மற்றும் வாட்ஸ் ஆஃப்களில் தவறான தகவல்களை பரப்பியதாக வழக்கு பதிவு செய்ததாக தகவல்.  

ஊரடங்கு நேரத்தில் பக்தர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியதாக தேவஸ்தானம் அளித்த புகாரின் அடிப்படையில் ஆந்திர மாநில போலீசார் தொற்றுநோய்கள் தடுப்பு  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  https://www.facebook.com/atheisttelugu/ 7-5-2020 இல் என்ற முகநூலில் ஒரு காலத்தில் புத்தர் கோயிலாக இருந்ததாகவும், தலைமுடி காணிக்கை செலுத்துவது இந்துக்களின் சம்பர்தாயம் இல்லை புத்த மதத்திற்கு உண்டானது என்றும் திருப்பதி கோயிலில் புத்தர் சிலையை இடித்து ஏழுமலையான் பெருமாள் சிலை வைக்கப்பட்டதாகவும் இதற்காக புத்தர் சிலையில் இருந்து பெருமாள் சிலையாக மாறுவது போன்று வீடியோ பதிவு செய்திருந்தனர். எனவே இந்த பதிவு செய்தவர்கள் மீது தேவஸ்தானம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

click me!