திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து..அவருக்கு எல்லா உதவியும் செய்வோம்..செல்லூர் ராஜூ பொளேர்!

By Asianet TamilFirst Published Jun 6, 2020, 8:58 PM IST
Highlights

இரு தினங்களுக்கு முன்பு அவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை செய்தி வெளியிட்டது. இதனையடுத்து அவருடைய உடல் நலனை அறிய தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிவைத்தார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனை நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு ஜெ.அன்பழகனின் உடல்நலன் குறித்து கேட்டறிந்தார்.
 

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு தினங்களுக்கு முன்பு அவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை செய்தி வெளியிட்டது. இதனையடுத்து அவருடைய உடல் நலனை அறிய தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிவைத்தார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனை நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு ஜெ.அன்பழகனின் உடல்நலன் குறித்து கேட்டறிந்தார்.

.அன்பழகனின் உடல்நலனை முதல்வர் கேட்டறிந்தது அரசியல் நாகரீகம் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து என மற்றொரு தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த  செல்லூர் ராஜூ, ஜெ.அன்பழகன் உடல் நலன் குறித்து பேசினார்.


“சட்டப்பேரவையில் தங்களுடைய ஆட்சியையும், கட்சியையும் ஜெ.அன்பழகன் விமர்சித்திருக்கிறார். அவர் தற்போது உடல்நலம் குன்றியிருக்கும் இந்த சமயத்தில் ஒருதலைபட்சமாக நடந்துகொள்ள மாட்டோம். ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து. எனவே, அவருக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்வோம். திராவிட இயக்கம் கட்டிக்காக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய ஒரே நோக்கம்” என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

click me!