அரசு ஊழியர்களுக்கு நினைத்து பார்க்காத வகையில் குஷியான அறிவிப்பு.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Mar 13, 2021, 1:19 PM IST
Highlights

இந்து ஆலயங்களை சீரமைக்க ரூ.1000 கோடியும், மசூதி, தேவாலயங்களை சீரமைக்க ரூ.200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்து ஆலயங்களை சீரமைக்க ரூ.1000 கோடியும், மசூதி, தேவாலயங்களை சீரமைக்க ரூ.200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுகவின் வேட்பாளர் பட்டியல் முதல் கதாநாயகன் என்றால், இரண்டாவது கதாநாயகன் தேர்தல் அறிக்கை என்று கூறினார். மேலும் அவர் பேசுகையில், டி.ஆர். பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன என்று தெரிவித்தார்.

திமுக தேர்தல் அறிக்கை;-

*  பெட்ரோல் ரூ.5,  டீசல் ரூ.4 குறைக்கப்படும்.

*  கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். 

*  சைபர் காவல்நிலையங்கள் செயல்படுத்தப்படும்.

*  மகளிர் சுய உதவி குழுக்கள் நிலுவையில் வைத்துள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் 

* வேளாண் பொருட்களின் விலை நிலவரத்தை தெரிவிக்கும் அமைப்பு உருவாக்கப்படும்

*  பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்தாக பால் வழங்கப்படும்
 
*  கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி

*  பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் பாதுகாக்க தனி ஆணையம் அமைக்கப்படும் பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்படும்

*  ஆட்டோ ஓட்டுனர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்கிட 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்

*  மகளிர் பேறுகால உதவி 24 ஆயிரமாக உயர்த்தப்படும்

*  சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வாங்கப்படும். 

*  சொத்துவரி உயர்த்தப்படாது

*  ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

* தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 70 சதவீதம் பணிகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் நிறைவேற்றப்படும்

* தமிழகத்தில் 75 சதவீதம் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சட்டம் இயற்றப்படும்

*  கல்வி நிறுவனங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்

*  குடிசை இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்

*  சென்னை உள்ளிட்ட நகரங்களில் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும்
 
*   தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய இத்திட்டம் செயல்படுத்தப்படும்

*  ரேஷன் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படுவதுடன் உளுத்தம்பருப்பு  மீண்டும் வழங்கப்படும்

*  பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்த வழிவகை செய்யப்படும்

*  பெறப்பட்ட மனுக்களின் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.

*   இந்து ஆலயங்களை சீரமைக்க ரூ.1000 கோடியும், மசூதி, தேவாலயங்களை சீரமைக்க ரூ.200 கோடியும் ஒதுக்கீடு.

*   முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும்.

*   இந்து கோவில்களுக்கு சுற்றுலா செல்ல ஒரு லட்சம் பேருக்கு நிதி வழங்கப்படும்.

* அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையாண பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்

click me!